ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் - மலை மலை.
கதை :
பழனிக்குப் பக்கத்து ஊரில் வாழும் பாசமான அண்ணன்-தம்பி நம்ப அருண் விஜய்யும், பிரபுவும். இவர்களின் ஊருக்கு சென்னையிலிருந்து வருகிற நம்ப ஹீரோயின் வேதிகா பார்த்ததும் காதல். ஆனால் வெளியே சொல்லிகொள்ளவில்லை இருவரும். அண்ணனுக்கு பெண் தேடுகிறார் தேடுகிறார், அருண். திருவிழா கம்பு சண்டையில் கஸ்தூரி-யை பார்கிறார் பிரபு. இவரையே திருமண பெண்பார்க்க அழைத்து செல்கிறார் அருண்.
வேதிகாவைத் தேடி சென்னைக்கு வருகிற அருண் ஒரு கூரியர் கம்பனியில் டிரைவராகிறார். பிரகாஷ்ராஜை தற்செயலாக சென்னை வந்ததும் சந்திக்கிறார். போலீஸ் இவரை என்கவுண்டர் செய்ய கார்த்திரும் நிலையில், M.L.A கனவோடு பிரகாஷ்ராஜ் நடத்தும் ஊர்வலத்தில், தெரியாமல் அவரை அடித்து விடுகிறார் அருண். M.L.A சீட் பறிபோன அவமானத்தில் பிரகாஷ் ராஜ் கொலைவெறியோடு அலைகிறார்.
தம்பியை தேடி சென்னை வரும் பிரபு தற்செயலாக கோவிலில் பிரகாஷ் ராஜை சந்திக்கிறார். பிறகு தான் தெரிகிறது இருவரும் சின்ன வயது தோழர்கள் என்று. அருண்-பிரபு உறவு வில்லனுக்கு தெரியவில்லை. அதே போல பிரபு-வில்லன் உறவு ஹீரோவுக்கு தெரியவில்லை.
வில்லன்-ஹீரோ என்ன ஆனார்கள், பிரபு-கஸ்தூரி, அருண்-வேதிகா திருமணம் என்ன ஆனது என்பது தான் மீதி கதை.
இந்த கதை ஒன்றும் புதிது அல்ல. ஏற்கெனவே பலமுறை பார்த்த அதே காதல், மோதல், சென்டிமென்ட், சுபம் கதை தான். ஆனால் சொன்ன விதம், படமாக்கப்பட்ட விதம் விறு விறுப்பு.
- சந்தாம் - கஞ்சா கருப்பு - ஆர்த்தி - மனோகர் கூட்டணி சிரிப்பால் நம் வயிற்றை பதம் பார்கிறார்கள்.
- ஹீரோ அருண், இந்த படத்தில் சண்டை காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார்.
- டான்ஸ் - சும்மா பின்னி எடுத்துள்ளார். முன்பு பார்த்த அருணை இதில் பார்க்க முடியாது. நன்றாக உழைத்துள்ளார். பலன் உண்டு.
- பிரபு - கதைகேற்ற நடிப்பை காட்டியுள்ளார். மனுஷன் இதே மாதி இன்னும் எத்தனை படங்களில் தான் நடிப்பாரோ தெரியல?. அவரது மீசையை பார்க்கும்போது அவர் சந்திரமுகியில் சொன்ன வசனம் தான் நினைவுக்கு வந்தது. "என்ன கொடும சார் இது ...!" பெரிய திரையில் பாதி இவரே நிற்கிறார். அவளவு பெரிய உடம்பு. சும்மா புசு புசுனு பார்க்க பயங்கரமா இருக்கிறார்.
- கேமிரா சும்மா புகுந்து விளையாடியுள்ளது
- வேதிகா - அதிகம் நடிப்புக்கு வாய்ப்பு இல்லாத இந்த கதையில் அழகா, ஆடி பாடி நடித்துள்ளார்.
- மணிசர்மாவின் பாடல்கள் - சுமார் ரகம்.
- பிரகாஷ் ராஜ் - அதே வில்லன் வேஷம் + கூட கொஞ்சம் அடிஆட்கள் + ஒரு துப்பாக்கி + கார். பார்க்க அலுப்பு தட்டுகிறது.
- சண்டைக் காட்சிகளில் சைக்கிளில் ஜீப்பைத் துரத்துவதும், வெறுங்காலோடு ஓடி பல மாடி கட்டிடங்களைத் தாவுவதும், பறந்து பறந்து எதிரிகளை தும்சம் செய்வது என ஒரு தெலுகு படம் பார்த்த உணர்வை தருகிறார். குருவி படத்தை நினைவுக்கு வந்தது.
எந்த எதிபார்ப்பும் இல்லாமல் போன எனக்கு இந்த படம் மன நிறைவை தந்தது. ஒருமுறை பார்கலாம்.
மலை மலை - மசாலா படம்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க. அது என்னை இன்னும் சிறப்பாக எழுத தூண்டும். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் -ரங்கோலி.
Thanks : AK.








0 comments:
Post a Comment