
நிழல் உலகம், கள்ளக்கடத்தல், போதைப்பொருள் என்பவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
கதை : புது படத்தின் திருட்டு வி.சி.டி வியாபாரம் பார்க்கும் பிரபுவுக்கு அசிஸ்டெண்ட் வேலை பார்க்கிறார் சூர்யா. இந்த கும்பலில் இவரைத் தவிர கருணாசும் ஒருவர். ஒரு கட்டத்தில் ஜெகன் பிரபுவிடம் வேலைக்கு சேர்கிறார். சூர்யாவும் ஜெகனும் ஆப்பிரிக்கா சென்று வைரம் கடத்துகிறார்கள். 'தங்க பிஸ்கட்' வரை இந்த கடத்தல் போகிறது.
தமன்னா ஜெகனின் தங்கை. கடத்தல் தொழிலுக்கு நடுவே சூர்யாவிற்கும் தமன்னாவிற்கும் காதல் தொழிலும் நடக்கிறது. சூர்யாவிற்கு அம்மா மட்டுமே, ஆனால் எல்லாமே பிரபு அண்ணன் தான். இப்படியிருக்க பிஸ்னஸ் நடக்கிற ஒவ்வொரு முறையும் போலிஸுக்கு செய்தி தெரிந்துவிட, ஒவ்வொரு முறையும் சாமர்த்தியமாக தப்பித்துக் கொண்டாலும், யாரு அந்த 'இன்பார்மர்' என்ற குழப்பத்தோடு இருக்கிறார்கள் சூர்யாவும் பிரபுவும்.
ஒரு கட்டத்தில் ஜெகன் தான் அந்த த்ரோகி என்று தெரிய வர, சூர்யா ஜெகன் நட்பு சொல்ல முடியாத சோகத்தில் முடிந்துவிடுகிறது, சூர்யா தமன்னா காதலும் அம்பேல் ஆகிறது. வில்லன் கும்பலில் இருக்கும் ஜெகன் கொலை செய்யப்பட, கொலைப் பழி சூர்யா மேல் விழ, என்ன நடக்க போகுதுன்னு நம்ம மண்டைக் குழம்ப, நாம் பார்த்து பார்த்து சலித்துப்போன அதே ஹீரோ வில்லன் சண்டை செய்து ஆப்பிரிக்கா மலை உச்சியில் எடுத்திருக்கிறார்கள்.
இனி படத்தில் நிறைகள் :
- சூர்யா ஆப்பிரிக்கா வில்லன்களோடு போடும் முதல் சண்டை நிச்சயமாய் தமிழ் சினிமாவிற்கு புதுசு.
- சூர்யா ஆரம்பம் முதல் இறுதிவரை தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகள் ஆங்கில படங்களின் பாணியில் நம்ப முடியாத அளவுக்கு இருந்ததாலும் சூர்யாவின் சிக்ஸ் பேக் உடம்பு கைகொடுத்திருக்கிறது. பொருட்களை திறமையாக கடத்தும் போதும் ஆங்கிலத்தில் அதிகாரிகளிடம் உரையாடும் போதும் நகைசுவைகாட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் சூர்யா தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
- ஜெகன் வயரு கிழிந்து சாகும் காட்சி நம் அடி வயிற்றைக் கலக்குகிறது. ஜெகனுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு.
- வில்லன் வீடுக்கு சென்று மைக்ரோ போன் வைக்கும் காட்சி சிறப்பாக இருக்கிறது. இயக்குனர் தமன்னாவை இன்னும் கொஞ்சம் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம். நடிப்புக்கு பெரிதாக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
- தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை திடீரென வந்த இராணுவம் சுட்டுக் கொன்றதும் உறவினர்கள் அந்த உடல்களை எடுத்துஸ் சென்றதும் மீண்டும் சில நொடிகளில் அங்கெ எதுவுமே நடைபெறாததுபோல மக்கள் சாதாரணமாக நடமாடுவது. அந்த கால் பந்தை இன்னொரு சிறுவன் எட்டி உதைத்து விளையாடுவது போன்ற கொங்கோவில் நடைபெறும் கொடுமைகளை ஒரே நிமிடத்தில் காட்டியிருப்பது இயக்குனரின் சிறப்பு.
- மலேசியாவில் நடைபெறும் கார் சேசிங் - பிரமாண்டமாக ஒலிப்பதிவு செய்து படத்துக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல் காட்சிகளிலும் பாலைவனம் , சிறிய செட்டை கூட பிரம்மாண்டமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
- வில்லன் ஆகாஷ் தீப் சைகளின் நடிப்பு நன்றாக இருக்கிறது. போதைபொருள் கடத்தியதை தட்டிக்கேட்ட தந்தையை மாடியிலிருந்து தள்ளி கொல்லும்பொதும் மதனின் வயிற்றை கிழித்து ஹெராயினை எடுக்க சொல்லும் போதும் கொடுரமாக இருக்கிறார்.
- ஒரு ஒரு பாட்டின் காட்சியும் கவிதை மாதிரி ... ஒரு ஒவியம் மாதிரி இருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மேலும் ஒரு கலக்கல். அயன் படத்தின் பாடல்கள். எல்லா பாடல்களுமே நன்றாக இருக்கின்றன.

படத்தின் குறைகள் :
- முதல் பாதி நன்றாக சென்றாலும் படத்தின் இரண்டாவது பாதியில் திரைக் கதையில் வலிமை குறைந்துவிடுகிறது.
- நண்பனை கொடூரமான கோலத்தில் பறிகொடுத்த சூர்யா, அண்ணனை இழந்த தமண்னா இப்படி சோகத்தில் இருக்கும் போது இருவருக்கும் ரொமண்டிக் டூயட் தேவையா?
ஒரு முறை பார்க்கலாம். அயன் மொத்தத்தில் நகைச்சுவை கலந்த ஆக்க்ஷன் படம். அனைவரும் பொழுதுபோக்காக ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
குறிப்பு: இந்த படத்தினை பார்க்க நீண்டநேரம் கியூ-வில் நின்ற டிக்கெட் வாங்கிய நண்பன் நிவாஸ்-கு என் நன்றிகள். மேலாடையை (ஷர்ட்) கழட்டிவிட்டு படம் பார்த்த அனுபவம் மீண்டும் கிடைத்தது.
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








3 comments:
Tats true kannan, film is not very bad or very gud, but we can see once. The way the film is directed is gud, there is no illogical scences as in vijay film. Director has the answer for each and every move. Overall its fine. Surya acting superb.....scores well when he speaks in local tamil and english...
Whatever you mentioned in your review is correct but the film hero is haris jayaraj. he is the backbone of the movie. totally i have wasted my time
This movie for summer entertainment. No story. No logic. Music is the real hero and camera.
Post a Comment