
அங்காடி தெரு. இது வரவிருக்கும் தமிழ் திரைப்படத்தின் பெயர்.'வெயில்' படத்தினை இயக்கிய வசந்தபாலன் இயக்கம் அடுத்த படம் இது. படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். இசை 'நாக்கமுக்க..' புகழ் விஜய் ஆண்டனி. பாடலாசிரியர் நா. முத்துகுமார். இவரின் கவிதை வரியில் எனக்கு பிடித்த பாடல் வரிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.
அழகில்லாத தனது மனைவி / காதலியை வர்ணித்து பாடுவது போன்ற ஒரு சூழலில் எழுதப்பட்ட பாடல் இது. நீங்களும் படித்து இல்லை இல்லை பாடித்தான் பாருங்களேன். பாடல் வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளம் இல்லை
அந்த காற்றில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கைவிரல் மோதிரம் தங்கவில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போது வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறில்லை
அவள் வாசல் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








3 comments:
Thanks for posting this lyrics. it is very interesting to read. Let me listen to this song.
Its very very nice...music is done by both Vijay antony and GV.Prakash
Thanks KRS and Amjad.
Post a Comment