May 31, 2009

தோரணை - திரை விமர்சனம்

விஷால் நடித்த அனைத்து படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் விஷால் நடித்த சத்யம் படத்தை பார்க்கவில்லை. ஏனோ படம் பார்க்க தோன்றவில்லை. அந்த படம் மிகப்பெரிய பிளாப். தப்பினேன். இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தோரணை படம் பார்த்தேன்.

கதை :
சின்ன வயதில் வீட்டை விட்டு ஓடி போன அண்ணனைத் தேடி அலங்காநல்லூர் கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் விஷால். துறைமுகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் போதை மருந்து கடத்தும் வில்லன் பிரகாஷ்ராஜ். கட்டப்பஞ்சாயத்து செய்யும் இன்னொரு தாதா/வில்லன் கிஷோர். இந்த இரண்டு ரவுடிகளுக்கும் தீராத பகை. ஒரு கட்டத்தில் ஸ்ரீமானை தன் அண்ணனாக கருதி, ஸ்ரீமானைக் கொல்லவரும் கிஷோரிடம் மோதத்துவங்கி, பின் தன் உண்மையான அண்ணன் கிஷோர் தான் என்பதை கண்டுபிடித்து அவரை திருத்தி(அடியாட்களை வசனம் பேசியே திருத்துகிறார்??), அவரை பழிவாங்க துடிக்கும் பிரகாஷ்ராஜிடம் இருந்து தன் அண்ணனை காப்பாற்றினாரா என்பது மீதிக்கதை. யப்பா மூச்சு வாங்குது கதைய சொல்லிமுடிகவே....

இனி படத்தில் நிறைகள் :
  • சந்தானம் விரசமா ரொம்ப இல்லாம, ஓரளவுக்கு நல்லா பண்ணி இருக்கார். சிரிக்க வைக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல்.
  • பிரியனின் கேமரா சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. ராக்கி ராஜேஷின் சண்டைக் காட்சிகளை நன்றாக படமாக்கி உள்ளார்கள்.
  • பாடல்கள் ஓகே ரகம். "வா செல்லம்" பாடல் நல்லா இருக்கு.
  • மயில்சாமியும் சந்தானுமும் பறவை முனியம்மாவிடம் அந்த புது பில்டிங்கில் நடக்கும் கூத்து சூப்பர்.
  • படத்தில, ஸ்ரேயாவ மட்டும்தான் பார்க்கற மாதிரி இருக்காங்க. அழகு + செக்ஸி.
  • படத்தில் அவ்வப்போது நம்மை ஆறுதல் கொள்ள செய்வது எஸ்.பாஸ்கரின் லொள்ளு வசனங்களும்தான். வழக்கம் போல இரட்டை அர்த்த வசனங்களும் உண்டு.

படத்தின் குறைகள் :
  • படத்தின் பெயரை "தோரணை" என வைத்துக் கொண்டு பாடல், பஞ்ச் டையலாக், வில்லன் என எல்லாரும் வார்த்தைக்கு வார்த்தை "தோரணை" பேசிக் கொண்டிருப்பது போரடிக்கிறது.
  • ஆறு அடி் 'கரண்டு' கம்பம் மாதிரி இருந்து கொண்டு, வாயை ஒரு மாதிரி சுளித்துக் கொண்டு விஷால் காமெடி பண்ணும்போதும் வயிறு (மட்டுமா ?) எரிகிறது. நல்ல ட்ரெஸ்ஸா போடுங்க விஷால். பார்க்க சகிகல.
  • 'விஜய்' போல சீனுக்கு சீன் பஞ்ச் வசனம் பேசுகிறார். இடைவேளைக்கு பிறகு விஷால் பேசுவது எல்லாமே பஞ்ச் டையலாக்.
  • விஷால் அடித்தால் மற்றவர்கள் பல அடிகள் தாண்டிப்போய் விழுவது...முடியலப்பா முடியலா. சண்டைனா கட்டிமுடிகாத அந்த கொடவுனுக்கு வந்து விடுகிறார்கள்.
  • ஸ்ரேயா, இவரின் தாராள மனம் படத்துக்கு பலம் சேர்க்கவில்லை, பாடல் காட்சிகள் தவிர இவருக்கு ஒண்ணும் பெருசா வேலை இல்லை. உடைகளாக உள்ளாடைகளை மட்டும் உடுத்தி பாடல்களுக்கு வந்து போகிறார்.
  • படத்தின் பின் பாதியில் விஷால்-ஸ்ரேயாவும் போடும் மொக்கை தாங்க முடியவில்லை.
  • ப்ரகாஷ்ராஜ், ரவுடி தலைவர். படம் பார்க்கும் நமக்கே இதே போல் எத்தனை படத்தில் தான் நடிப்பார் என்று தோன்றுகிறது. அவருக்கு தோணாதா?

குறிப்பு:
இனி வரும் காலகட்டத்தில் நடிகைகளுக்கு மேலாடை தேவைஇருகாது போல தெரிகிறது. குடும்பத்தோடு வந்து படம் பார்க்க முடியுமா இந்த மாதிரி உடையணிந்தால்...!?

தோரணை - ஒரே தலைவலி.

இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

3 comments:

Jimmy said...

நண்பனே என்னை காபாற்றியதற்கு நன்றி...

Senthil said...

தோரணை ஒரு வேதனை

Lara Kannan said...

வேதனை ... :(