Apr 21, 2009

'மாட்டுத்தாவணி' - பட பாடல்கள் ஒரு பார்வை


'மாட்டுத்தாவணி' - நீண்ட வருடங்களுக்கு பின்னர் 'பவித்ரன்' இயக்கியுள்ள புதிய படம். மதுரை பேருந்து நிலையத்தின் பெயரில் வெளிவர இருக்கும் இந்த படத்தின் பாடல் வெளியீடு இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. இதற்கு முன்னர் இவர் 'சூரியன்', 'இந்து' போன்ற பல படங்களை இயக்கியவர். டைரக்டர் சங்கரின் குரு என்பது மேலும் இவருக்கு சிறப்பு.

'மாட்டுத்தாவணி'-இல் மொத்தம் நான்கு பாடல்கள். இனி பாடல்களை பற்றி பார்ப்போம்.

கஞ்சி கொண்டு போற பொண்ணு கண்டுவா வழிமறிச்சு- வழிமறிச்சி
கேளிபேசலமோ செல்லையா, சொல்லையா - உனக்கு
கெட்ட புத்தி ஆகலாமா சொல்லையா -உனக்கு
கெட்ட புத்தி ஆகலாமா சொல்லையா
...
- என்று தொடங்கும் பாடலை மிகவும் மனம் குசலம் பேசுவதை எதிர்த்து மனம் உருகி பாடும்படலாக அமைந்துள்ளது. இந்த பாடல் பாடியவர்: மாணிக்கவிநாயகம்.

அண்ணமாரே தம்பிமாரே அருமையுள்ள ஐயாமாரே
அண்ணமாரே தம்பிமாரே அருமையுள்ள ஐயாமாரே
கல்லூரி மாணவன் பன்னீரின் கதையை கேளு
பாட்டுலதான் சொல்ல - அத கேட்டுபாரு மெல்ல
பாட்டுலதான் சொல்ல - அத கேட்டுபாரு மெல்ல - அய்யா
ஈ எறும்பு புழு பூச்சி எல்லாத்துக்கும் நண்பனையா
தண்ணீரில் முகம்பாத்தா பால் மனமே தெரியுமடா
நண்பன் பசியை தடுப்பான் - இவன் தண்ணீரை குடித்து படுப்பான்
நண்பன் பசியை தடுப்பான் - இவன் தண்ணீரை குடித்து படுப்பான்
துரோகத்த எதிர்த்து நின்ன மூணு பேரை அறுத்து கொன்னான்
மூனும் பொட்டபுள்ள ஒருத்தியகூட தொட்டதில்லை
காலம் தந்த தீர்ப்பு - நம்ப பன்னீர் கையில காப்பு
காலம் தந்த தீர்ப்பு - நம்ப பன்னீர் கையில காப்பு
....
-என்று தொடங்கும் பாடல், ஒரு இளைனனின் கதையை பாடல் மூலம் சொல்லப்பட்டுள்ளது. கிராமத்து மனம் வீசும் இந்த பாடலை பாடியவர் : மு.கா.முத்து.

கல்யாண புதுசுல - மச்சான்
என்னென்னமோ வாங்கிதந்தே - இப்போ மச்சான்
மானா மதுரைக்கு போரவரே மட்சான் போரவரே ....மாமா போரவரே
மானா மதுரைக்கு போனீங்கனா
எனக்கு மாவுல பழுத்த பழம் வாங்கிவாங்க ...
மாவுல பழுத்த பழம் என்னடி குட்டி
சொக்கா சொல்லடி குட்டி
ஜோரா சொல்லடி குட்டி - நீ
வெவரமாக சொன்னையினா வாங்கிவறேன் - உனக்கு
மாவுல பழுத்த பழம் வாங்கிவறேன்
....
- என தொடங்கும் கேள்வி -பதில் போன்ற இந்த தெருகூத்து பாடலை பாடியவர்கள்: கரியப்பட்டி லட்சுமி மற்றும் பாண்டி.

இந்த பாடலை கேட்கும் போது 'பருத்திவீரன்' பட பாடல் தான் நினைவுக்கு வருகிறது. அந்த படத்தில் வரும் பாடலை போன்று மெட்டமைப்பும் பாடலின் தாளமும் இருக்கிறது. தேவா சார் இன்னும் நீங்கள் திருந்தவில்லையா ??

காதலிக்க போரவரே காதல் செய்து பார்த்தவரே
காதலிக்க போரவரே காதல் செய்து பார்த்தவரே
காதலித்து தோத்தவரே கல்யாணம் ஆனவரே
பூவா ஒருத்தி சிரிச்சா மனச தட்டானைப்போல புடிச்சா - அய்யா
பூவா ஒருத்தி சிரிச்சா மனச தட்டானைப்போல புடிச்சா
சின்ன சிறு வயசுப்பையன் சீரான அழகுப்பையன்
அரும்பு மீசைக்காரன் அதிகமான பாசக்காரன்
பையன்வயசு கொஞ்சம் - ஆனா வைரம் பாஞ்ச நெஞ்சம்
பையன்வயசு கொஞ்சம் - ஆனா வைரம் பாஞ்ச நெஞ்சம்
தூரியில் விழுந்தாலும் புஸ்ஸிலையும் தொங்கினாலும்
துருத்து பிகர பார்த்தா படபடக்க நாங்கவறோம்
படிக்க வரோம் சும்மா - அட குத்துங்கடா கும்மா
அட குத்துங்கடா கும்மா .....

- என தொடங்கும் கல்லூரி விடலை பருவத்தின் ரசனைகளை பாடலில் ஒளிகவிட்டுருப்பது கவிணனின் தனி சான்றே.

மொத்ததில், 'மாட்டுத்தாவணி' பட பாடல்கள் கிராமிய மன்வாசத்தோடு கல்லூரி மாணவனின் வாழ்க்கையை சொல்லும் விதமாக அமைந்துள்ளது. எல்லாப்பாடல்களும் மதுரை மனம் கமல அமைத்திருப்பது சிறப்பு. இசை அமைப்பாளர் தேவாவுக்கு இந்த படம் மேலும் ஒரு மைல்கல். பாடல்களை கேட்கும்போதே படத்தினை பார்க்கவேண்டும் என்ற உணர்வை தோன்றுகிறது.

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: