தங்கமுலாம் பூசிய என்இளைய வானமே -
கொல்லிமலையை -
இமையாக கொண்டாயோ ?
என் வீட்டு தோட்டத்து
செடிகளஎல்லாம் உனையே
காதல் கொன்கின்றனவே -
என்ன வனப்பு உன்னிடம் -!
பொங்கல் நாளில் -ஒவ்வரு வருடமும்
நினைவுக்கு வருதே
உன்னை பார்க்கும்போதெல்லாம் -
என் காதலி போலவே !!!
நகரத்து பணியின்றி - சராசரி
மனிதனாய் -
கிராமத்து வீதிகளில் -
நடக்கும் போது
கிடைக்கும் சுகம் - சுகமே !
மேக கூட்டங்கள் எனை கடத்து போகும் போது
என் கேமரா கூட - காதல்
கொள்கிறது எனக்கு தெரியாமல் !
வாழ்க்கை வளைவு நெளிவு நிறைத்தது - என்று
எனக்கு ஒவுவ்று முறையும்
பாடம் நடத்தும் - பலகை
என் சகோதரர் வீடு செல்லும் வழியில் ....
தமிழர் திருநாளில் - அந்தரத்தில் பறக்கும் - இந்த
குதிரை திருவிழா -
வெகு பிரபல்யம் - என் கிராமத்தில்!
அதுவும் கரும்பை
சுவைத்தபடி நண்பர்களுடன்
இந்த காட்சியை காணும்போது
அட அட - இத்தனை வர்ணிக்க
வார்த்தைகள் ஏது !?
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








0 comments:
Post a Comment