மஞ்சள் சரடு சுற்றிய மண்பாநையும்
சாணம் தெளித்து கோலமிட்ட
மண்தரையும் மங்கலம் நிறைந்த
மஞ்சள் குலையும் வீடும்
வீதியுமாய் அலங்கரித்த தோரணமும்
குமரிகளும் கிழவிகளும் போடும்
கும்மாளமும் வாசலில் வைத்த காய்
கனியும் "பொங்கலோ பொங்கல்"
என்ற மகிழ்ச்சிக்குரலும்
கேட்காமல் இருந்தாலும்
கேஸ் அடுப்பிலாவது
பொங்கல் வைத்து வாழும்
தமிழனாகி விட்டோம் என்றாலும்
இன்னும் கிராமங்களிலாவது பொங்கல்
பொங்கும் ஓசை கேட்கிறதே
அது வரையில் சந்தோஷம் தான்
"எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்"
நிலவு ஏங்கிக் கொண்டிருக்கிறது!
கரும்பும்சக்கரை பொங்கலும்
எதற்கு ?
கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டு
போதும்!
உன் பார்வைகாகத்தான்வழுக்கு மரத்தில் ஏறினேன்.
நீ பார்த்த பார்வையில்
வழுக்கி விழுந்தேன்!
உனக்குத்தான் முதல் பரிசா?
உன்னை வரைத்த
உன் அம்மாவுக்கே கொடுத்திருக்கலாம்?
கோலங்கள் இல்லாத தமிழர் இல்லமா?. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளில் விதவிதமான கோலமிட்டு,அறுவடைத் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம்.
உங்களுக்காக...

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








0 comments:
Post a Comment