
கதை : தடை செய்யப்பட்ட மருந்துகளை (ஆந்திர!) அரசு மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்கிறது வில்லன் கோட்டா சீனிவாசராவ் அன்ட் கம்பெனி. பலர் இதனால் இறந்து போவதை கண்டுபிடிக்கிறார் மருத்துவக் கல்லூரி மாணவியாக வரும் மீனாட்சி.
தட்டிக் கேட்கும் டாக்டரை வில்லனின் மகன் செய்வதை மீனாட்சி தனது செல்போனில் வீடியோ எடுக்கிறார். மீனாட்சி செல்போனில் வீடியோ எடுத்ததை பார்த்து வில்லன் கூட்டம் துரத்த, கும்பிட போன தெய்வம் குறுக்கே வருவது போல வந்து சேர்கிறார் சுந்தர்.சி. அப்புறம் என்ன ஹீரோ எல்லா வேலைகளையும் தூக்கி போட்டு விட்டு ஹீரோயின் சார்பில் நியாயம் கேட்க அலைகிறார்.
கடைசியில் வில்லன் பேசுவதை மக்களுக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்து குற்றத்தை தோலுரித்து காட்டுகிறார்களாம்.!? இந்த டி.வி. மாஸ் இம்சை தாங்கலை. கடைசி காட்சியில் டி.வி.யில் பார்க்கும் மக்கள் கொதித்து எழுவதை இன்னும் எத்தனை படங்களில்தான் காட்டப் போகிறார்களோ! முடியல சாமி முடியல ....
படத்தில் சுந்தர்.சியை விடவும் கத்தி, துப்பாக்கி எல்லாம் ரொம்ப நல்லாவே நடிச்சிருக்கு.
விவேக்கிடமிருந்து தெலுங்கு வசனங்கள் எல்லாம் ரொம்ப நல்லாவே வருது, ஆனா காமெடி மட்டும் வரவே மாட்டேங்குதேப்பா! என்னாச்சு விவேக்? சின்னக் கலைவாணர் பட்டத்தை பிடுங்கிவிட்டு சின்னக் கொலைவாணர் பட்டத்தை கொடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை. வடிவேலு பாணியில் அடிபட்டு, டிக்கியில் கத்திக்குத்து படுவதெல்லாம்....சகிகல...
கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சியா இது? என கேட்கத் தூண்டும்படி நடிப்பை மறந்து நிற்கிறார். மீனாட்சியும் தன் பங்குக்கு நமீதாவுக்கு நானும் குறைச்சலில்லை என்று நிருபிக்கிறார். ஆனால் நடிக்க மட்டும் இயலாமல் தவிக்கிறார். பாவம்!
திடீர்னு வந்து காமெடி என்கிற பெயரில் சுந்தர்.சியின் அண்ணன்களாக வரும் இளவரசு, தாமு, லக்ஷ்மணன் செய்யும் அளப்பரைகள்... ஐயோ அம்மா... முடியல!
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் நான்கு பாடல்களில் முதல்வர் கருணாநிதியின் பேரன் அறிவுநிதி, பாடியிருக்கும் காதல் வைபோகமே பாடல் மட்டும் ரீமிக்ஸ் பாடல் என்பதாலோ என்னவோ கேட்கும்படி உள்ளது. அதுவும் கொடுமையான காட்சி படுத்துதலால் பார்க்கும் படி இல்லை என்பது வேதனை.
சாமுராய், குருவி, படிக்காதவன் என பல படங்களை துண்டு துண்டா வெட்டி ஒண்ணு சேத்து 'பெருமாள்' படம் பண்ணி இருக்கிறார் இயக்குநர். பெருமாள் படத்தின் கதை வசனம் எழுத்தாளர் பாலகுமாரனாம்!!!. ஒரு சீனில் கூட நம்ப முடியவில்லை.
குறிப்பு :
- இந்த அற்புதமான படத்தினை பார்த்துகொண்டிருக்கும் போது நான் ஒருமுறை தூங்கிபோனேன். நண்பருடன் (நிவாஸ்) சென்றதால் என்னை எழுப்பிவிட்டார். இதே போல நண்பரும் நான்கு முறை தூங்க நானும் எழுப்பிவிட இறுதியில் அவரது தூக்கத்துக்கு தடையாக இருக்க விரும்பாமல் அவரை படம் முடியும் வரை ....எழுபவே இல்லை. தியேட்டரில் தூங்கின முதல் அனுபவம் இன்று...
- இப்படி ஒரு படத்தை பார்க்க, அவசர அவசரமா சரைகுரையா சாப்பிட்டு வந்தோம்.
- அநியாயத்திற்கு ருபாய் 80 -i டிக்கெட்டுக்காக செலவுசெய்துவிட்டேன். அந்த 'பெருமாள்' என்னை மன்னிப்பாராக (நான் கடவுளை சொன்னேன் )!!!
பொழுது போகாமல் கையில் பணமிருக்கும் அன்பர்கள் சென்று தூங்கி அல்லதுரசித்துவரும் படம் இது. (யப்பா என்னை விட்டுடுங்க) அட போங்கயா ......போயி ...மீண்டும் first இருந்து படிசுட்டுவாங்க.
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக கார்த்திக்கும் நண்பன் ...ரங்கோலி








2 comments:
ஏய் நீதான் ரண வேதனை பட்டு படத்த பாத்தினா , ஏன்டா இத வேற விமர்சனதுலே போட்டு, எங்கள வேற படிக்க சொல்லி உயிரை வாங்கற!!! இது உனக்கே நல்லா இருக்கா சொல்லு!!!
Kannn
first of all u should change ur room from aravind theatre.
Post a Comment