காக்கைக்கு
பகிர்ந்து உண்ணும் குணம்
எப்படி வந்தது?
பூக்கள் பலவும்
பூக்களாகவே இருக்க...
சில பூக்கள் மட்டும் ஏன்
காயாகி கனிகிறது ?
எத்தனையோ மேடுகளைக்
கடந்து வரும் கடல் அலை ...
சிறு மணல் மேட்டில்
உடைந்து திரும்புகிறது.
வண்டும் வண்ணத்துப் பூசயும்
தேனை குடிக்கிறது
தேனீ மட்டும் சேகரிக்கிறது.
இவற்றிற்கு காரணம் இயற்கை!
ஆயிரம் ஆயிரம்
அழகிய பெண்களின் நடுவே...
ஒருத்தி மட்டும் கவனம் திருப்புகிறாள்
ஆயிரம் ஆயிரம்
இளைஞர்களின் நடுவே
ஒருவன் மட்டும் கவரப் படுகிறான்.
இத்தகு காரணம் காதல்!!
காதலும் இயற்கை தானே ?








0 comments:
Post a Comment