Mar 23, 2009

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று

அடங்க மறு , அத்து மீறுஇன்று அரசியலில் எல்லோரும் அறிந்த பிரபலமானவாசகம். இதை இந்தியாவிற்கு முதலில் சொன்ன மாவீரன் பகத் சிங் . இன்றுஅவன் தூக்கிலிடப்பட்ட நாள் . நம்மில் பலருக்கு ஞாபக மறதி அதிகம். அதனால்தான் ஒரு வீரனின் தியாகம் மறக்கப்பட்டு விட்டது. நாமே மறந்துவிட்ட ஒன்றைநாம் எப்படி அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் ? நம் முந்தைய தலைமுறைநமக்கு இதை சொல்ல மறந்ததால் தான் நாம் சூடு, சுரணை , மானம் , வெட்கம்எல்லாம் மறந்து வேடிக்கை மனிதர்களை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அவரது கதை ஆயிரமாயிரம் முறை பேசப்பட்டுவிட்டதுஎன்றாலும், அவரது தியாகத்தை நினைவு கூறும்வகையில் மீண்டும் ஒரு முறை பேசுவோம். தியாகிலாலா லஜபதி ராய் சைமன் கமிஷனுக்கு எதிரானபோராட்டத்தில் பிரிட்டிஷ் போலிசாரால் கடுமையாகதாக்கப்படுகிறார். இதை தன் கண்ணெதிரே கண்ட பகத்சிங் பழிவாங்க முடிவெடுத்து தனது கூட்டாளிகளுடன்திட்டமிடுகிறார். திட்டத்தில் கூட்டாளி தவறான நபரைஅடையாளம் காட்டிவிட பகத் சிங் Deputy Commissioner J.P. Saunder சுட்டு விட்டு தப்பி விடுகிறார்.

பிறகு அசெம்ப்ளி இல் குண்டு போட முடிவெடுத்து தனதுசகா தத் உடன் இணைந்து திட்டமிட்டபடியே அசெம்ப்ளி இல் குண்டு போட்டுவிட்டுஇன்குலாப் சிந்தாபாத் ( புரட்சி வெல்க ) ” என்று கோசமிட்டபடியேசெல்கிறார்கள். அந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமோ , உயிர் பலியோஇல்லை. அவர்களின் நோக்கம் தங்களது எதிர்ப்பை அழுத்தம் திருத்தமாக பதியவைக்க வேண்டும். அவ்வளவே .

பிறகு பிரிட்டிஷ் போலிசாரால் குண்டு போட்ட குற்றத்திற்காகவும் , Saunder சுட்டு கொன்ற குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்நிறுத்தபடுகிறார்கள் . நீதி மன்றத்தை தங்களின் கருத்தை , எதிர்ப்பை , புரட்சியைஉலகிற்கு கூற சரியான இடமாக நினைத்து குற்றத்தை ஒப்புகொண்டதோடுமட்டுமல்லாது , ஏன் செய்தோம் என்று நீண்ட வீர உரை ஆற்றுகிறார்கள். அதுமக்களிடையே பத்திரிக்கை வாயிலாக சென்று பெரும் எழுச்சியைஏற்படுத்துகிறது.

நீதிமன்றம் பகத் சிங் , ராஜகுரு மற்றும் சுகதேவ் மூவருக்கும் மரண தண்டனைஅளிக்கிறது. மகாத்மா காந்தி வைஸ் ராயிடம் அவர்களை மரணதண்டனையில்இருந்து குறைக்க வேண்டி மனு கொடுத்திருக்கிறார். எல்லாம் கை மீறி விட்டநிலையில் அது நிராகரிக்கபடுகிறது.

சிறையில் கடைசி நிமிடம் வரை புரட்சி புத்தகங்களை படித்தும் , 410 பக்கங்களில்தனது நாட்குறிப்பில் தனது கருத்தை பதிய வைத்தும் , கொஞ்சமும்அச்சமின்றியும் வாழ்ந்திருக்கிறார். 1931 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23 ஆம் நாள்மாலை 7 மணிக்கு ( சிறைக்கு வெளியே மக்களின் கூக்குரலுக்கு பயந்து ஒரு நாள்முன்னதாகவே மூவரும் தூக்கிலடப்படுகிறார்கள். அவரது தியாகம் மக்கள்மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இளைஞர்கள் அவர்பாதையில் பயணிக்க தொடங்குகின்றனர். பிரிட்டிஷ் ஏகதிபத்யம் ஆட்டம் காணஆரம்பிக்க அது ஒரு முக்கிய சம்பவமாக அமைகிறது.

அவரது தியாகத்தை மரியாதை செய்வதாக இருந்தால் , அநீதிகெதுராக நாம்நம்மால் இயன்ற அளவேனும் குரல் கொடுப்பதே ஆகும். நமதுஅரசியல்வாதிகளும் , அதிகாரிகளும், ரவுடிகளும், பொது இடத்தில் விதிகளைஅத்துமீறும் யாவரையும் நாம் குறைந்தபட்சம் கண்டிக்கவது செய்யவேண்டும். எத்தனை ஆயிரம் முறைநமக்கு எதற்கு பிரச்சனைஎன்று ஒதுங்கிபோயிருக்கிறோம். அதை முதலில் நிறுத்த வேண்டும். இதுவே இன்று நாம்ஒவ்வொருவரும் எடுக்கும் சபதமாக இருக்கட்டும்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

1 comments:

Tamilselvan said...

சூப்பர் மச்சி கலகிட்ட!