ரொம்ப நாளாச்சு தமிழ்ல ஹாரர் (Horror) படம் பார்த்து. அலை படத்தை இயக்கிய விக்ரம் கே. குமாரின் இரண்டாவது படம். இந்தியில் இப்படம் 13பி என்ற பெயரில் வெளியாகிறது.
கதை : புதுசா தன் மனைவி, அண்ணன், அண்ணி, அவர்களின் இரண்டு குழந்தைகள், தங்கை, அம்மா என்று எட்டு பேர் கொண்ட கூட்டு குடும்பம் பதிமூன்றாம் மாடியில் உள்ள 13பி என்கிற ப்ளாட்டை விலைக்கு வாங்கி குடியேறுகிறார்கள்.
ஆனால் மாதவன் மனதில் மட்டும் ஒரு சின்ன கிலேசம் ஏற்படுகிறது.. அதிலும் அந்த லிப்ட் மேட்டரிலிருந்து, அதன் பிறகு செல்போனில் அவரை எடுக்கும் போட்டோ என்று ஆரம்பித்து, அவர்கள் வீட்டில் மட்டுமே வரும் ‘யாவரும் நலம்’ என்கிற சீரியலில் நடக்கும் விஷயங்கள் எல்லாமே அவருடைய வாழ்கையிலும் நடக்கிறது.
முதலில் நம்ப மறுக்கும் அவர், பின்னால் நடக்கும் சம்பவங்கள் மூலம் விஷயம் உறுதியாக. தன் போலீஸ் நண்பன் மூலம் சால்வ் செய்ய முயல்கிறார். நிஜமாகவே பேய் இருக்கிறதா...? எதனால் இவருடய வீட்டை மட்டும் தாக்குகிறது,? பேய்களிடமிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுகிறாரா..? என்பது தான் க்ளைமாக்ஸ்.
இனி படத்தில் நிறைகள் :
தமிழ்திரைப்பட வரலாற்றிலேயே முதன் முதலாக மாதவன் நடித்த "யாவரும் நலம்" படத்தை ஹாலிவுட்டில் தயாரிக்க அமெரிக்க திரைப்பட நிறுவனமான வெயின்ஸ்டெய்ன் கம்பனி இதன் உலக உரிமையை வாங்கி இருக்கிறது.
ஒரு நல்ல படம் பார்க்க அழைத்த நண்பன் விஜய்-கு என் நன்றிகள்.

- படம் ஆரம்பித்ததிலிருந்து நம்மை ஒருமாதிரி தயார் படுத்திவிடுகிறார்கள். அந்த லிப்ட் காட்சி, குருடருடன் வரும் நாய் வீட்டினுள் நுழைய மறுக்கும், காட்சி, என்று கொஞ்சம், கொஞ்சமாய் நம்மை உருவேத்தி, படம் முடியும் போது நம்மை சீட்டு நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.
- மாதவன் உணர்ந்து செய்திருக்கிறார். மொத்த படத்தையும், தன் தோள் மேல் ஏற்றிக் கொண்டு, அவருக்கு எப்படி பதை, பதைப்பு கூடுகிறதோ, அது போலவே கூடவே நம்மையும் சேர்ந்து டென்ஷனாக்கி விடுகிறார்.
- மாதவனின் மனைவியாக வரும் நீது சந்திரா, மாதவனின் அம்மாவாக சரண்யா. அவரை அழ வைக்காமல் குதூகலமாக காட்டியதற்கே இயக்குனரை பாராட்டலாம். மாதவனின் நண்பராக வரும் போலீஸ் அதிகkari, மனநலம் தவறியவர், வக்கீலாக வரும் சம்பத், டாக்டராக வருகிறவர் என அனைவரும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
- படத்தின் உயிர்நாடி பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, Horror படங்களுக்கான வித்யாசமான கோணங்கள், லைட்டிங், படம் முழுவதும் விரவி வரும் மஞ்சள் டிண்ட் என்று மொத்த படத்தையும் பிரகாசிக்க செய்கிறார்.
- இசையைவிட பி.சி.யின் ஒளியும், இருளும் நம்மை அதிகமாக பயமுறுத்துகிறது. மாதவன் அதிர்ச்சியடையும்போது கேமாரா அளவுக்கதிகமாக நடுங்குகிறது. அதேபோல் டாக்டரை காண்பிக்கும் சில காட்சிகளில் ஊஞ்சல்போல் ஒரு தினுசாக ஆடுகிறது. இரண்டுமே கதைக்கு வெளியே நம்மை இழுத்து விடுகின்றன.
- குறிப்பிட்டு சொல்லக்கூடிய இன்னொருவர். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். இவரும் தன் பங்குக்கு மிரட்டியிருக்கிறார்.
படத்தின் குறைகள் :
- சங்கர் இஷான் லாயின் இசை சுத்த வேஸ்ட். இம்மாதிரியான படங்களுக்கு பாடலகள் தேவையா...? ஒரு மிகப் பெரிய தடை. நல்ல வேளை சில பாடல்களை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். யப்பா தப்பித்தோம் என்றாகிவிடுகிறது.
- தனது வீட்டில் நடக்கப் போகும் சம்பவங்களை தொலைக்காட்சி தொடர்மூலம் தெரிந்து கொள்கிறார் மாதவன். இவர்கள் வீட்டில்மட்டும் ஒளிபரப்பாகும் படி இருபது காதில் காலிபிளவரை வைத்துவிடுகிறார்கள்.
- கிளைமாக்ஸில் கனவு மூலமாகவும் சில விஷயங்கள் அவருக்கு தெரிய வருகிறது. இது தேவையில்லாத குழப்பத்தை திரைக்கதையில் ஏற்படுத்துகிறது.
- தனது வீட்டிலுள்ளவர்களை விமானத்தில் எங்காவது அனுப்பி வைக்கும்படி மாதவன் கேட்பதும், அவரது போலீஸ் நண்பரும், டாக்டரும் அதற்கு உடனடியாக ஒத்துக் கொள்வதும் நம்பும்படி இல்லை.
சமீபத்தில் பார்த்த வில்லு, ஏகன் போன்ற டெரர் படங்களை பார்த்து ஹாரர் ஆகியிருக்கும் நேரத்தில் நிஜ ஹாரர் படம் இது.
சமீபத்தில் எந்த ஒரு த்ரில்லரும் மக்களை இந்தளவு கவர்ந்ததில்லை. கோர முகம், கல்லறை தோட்டம், இரவில்வரும் வெள்ளைச் சேலை ஆவி என எதுவும் இல்லாமலே பார்க்கிறவர்களை பயமுறுத்துகிறார்கள் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும்.
தமிழ்திரைப்பட வரலாற்றிலேயே முதன் முதலாக மாதவன் நடித்த "யாவரும் நலம்" படத்தை ஹாலிவுட்டில் தயாரிக்க அமெரிக்க திரைப்பட நிறுவனமான வெயின்ஸ்டெய்ன் கம்பனி இதன் உலக உரிமையை வாங்கி இருக்கிறது.
ஒரு நல்ல படம் பார்க்க அழைத்த நண்பன் விஜய்-கு என் நன்றிகள்.
யாவரும் நலம் – தியேட்டரில் சென்று பார்க்கவேண்டிய படம். பார்த்தல் (யாவருக்கும்) நலமே.
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் ...ரங்கோலி

6 comments:
nalla padathuku ethuu matheri vemarsanam roomba aavasiyam. really superb kannnan.
I too see the film last friday.. The screenplay is really horror and thrilling, that no one can guess who s the culprit for the happened murders long back.. As u said full scorer of the movie is P.C.S and Duppy (BG score).. Maddy comes next to them..
Mr Rangoli you can better join as an assistant to Madhan. U've done a gr8 work. Gave me more excitement to watch this movie:)
A typicall horror movie that fully quench our expectations. Good work by the film team and for the post too.
குமுதம் மற்றும் ஆனந்த விகடனில் திரை விமர்சனம் படித்த மாதிரி ஒரு எண்ணம் வந்துடுச்சு!. கை வசம் ஒரு எடிட்டர் தொழில் இருக்குனு சொல்லு!
Yavarum Nallam film is really a worth watching. Good screenplay and direction maintain the suspense till climax. Special kudos to P.C.Sreeram for his excellent work in this film.
Kannan - Unnoda thirai vimarchanan ellaraiyum padam parka thoondu kirathu:-)
Better u start an adversiting company to compete with Sun Pictures.
Post a Comment