Jul 10, 2009

வாமணன் - திரை விமர்சனம்

சென்னை 600028, சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் நடித்த ஜெய் முதல் முறையாக தனி ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள படம் தான் இந்த வாமணன். இயக்குனர் கதிரிடம் உதவியாளராக பணியாற்றியவர் அஹ்மது இந்த படத்தின் இயக்குனர். இது ஒரு திரில்லர் வகை படம்.

கதை :
கடற்கரையில் நீச்சல் உடையில் லட்சுமிராயை வைத்து ரிமோட் கண்ட்ரோல் ஹெலி கேமரா மூலம் படமெடுத்து கொண்டிருக்கும் ஒரு இயக்குனர். திடீரென்று ஹெலிகாப்டர் ரிப்பேர் ஆகி பக்கத்தில் உள்ள ஒரு கார்டன் தென்னம்மரத்தில் மாட்டி கொண்டுவிட, அங்கே வருங்கால முதல்மைச்சராய் வர இருக்கும் டெல்லி கணேசை, மற்றொரு அமைச்சர் சம்பத் தனது ஒரு அடிஆளுடன் சேர்ந்து கொலை செய்கிறார். அது, மரத்தில் மாட்டிய கேமரா மூலம் அந்த டேப்பில் பதிவாகிவிட, அந்த டேப்பை தேடி போலீஸும், அமைச்சரும் அலைய, அந்த டேப் லட்சுமிராயிடம் இருப்பதாய் போலீஸும், அமைச்சரின் ரவுடிகளும் அலைய, ஒரு கட்டத்தில் அவளை கொலை செய்கிறார்கள்.

இதற்கிடையில், சினிமாவில் நடித்து பெரிய ஆளாகவேண்டும் என்று சென்னைக்கு நண்பர் சந்தானம் வீட்டுக்கு வரும் ஜெய் நடிப்பு வைப்பு தேடி வரும் நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனில் நம்ப கதாநாயகி ப்ரியா ஆனந்த்-ஐ பார்க்கிறார். கண்டதும் காதல். ஒரு கட்டத்தில், டேப் இவனிடம் மாட்டிக் கொள்ள, லட்சுமிராயின் கொலையில் ஜெய் மாட்டிக்கொள்ள, போலீஸ் துரத்த, அதிலிருந்து எவ்வாறு வெல்கிறான் என்பதை, பரபரப்பாக பல திருபங்களுடன் சொல்லி முடித்துள்ளர்கள்.இனி படத்தில் நிறைகள் :
  • சந்தானம் - முதல் பாதியின் ஹீரோ. வயிறு வலிக்க சிரிக்கவைக்கிறார். அதுவும் ஊர்வசி - சந்தானம் சமையல் காட்சியில்...சபாஸ்!!
  • ஜெய் தன் காதலை சொல்லும் மணல் ஓவியக் காட்சி ஒரு கவிதை. அற்புதம். இதற்கவே மனதார கைதட்டி டைரக்டர்-ஐ பாராட்டலாம்.
  • லஷ்மிராய் - நல்ல பாத்திர தேர்வு. நன்றாக தனது நடிப்பை வெளி படுத்தியுள்ளார்.
  • மனதில் நிக்கும் படி 3 பாடல்கள் அமைந்துள்ளது. யுவன் மியூசிக் பல இடங்களில் மிளிர்கிறது.
  • ரஹ்மான் கொடுத்த வேலையை கச்சிதமாய் செய்திருக்கிறார்.
  • கடைசி 20 நிமிடங்களில் கதையில் பல திருப்பங்கள்.
  • கேமிராமேன் - பல இடங்களில் மேனக்கேட்டுருப்பது தெரிகிறது. சபாஸ்!
  • பீகார் கும்பல் மேட்டரை எதற்காக கடைசி வரை கொண்டு வருகிறார் என்று யோசித்து கொண்டிருந்த போது, க்ளைமாக்ஸில் புத்திசாலிதனமாய் நுழைத்திருக்கிறார் இயக்குனர். சபாஸ்!
படத்தின் குறைகள் :
  • ஜெய் அப்படியே நடிகர் விஜய் போல நடிப்பதற்கு முயற்சி செய்கிறார். நடப்பது, சிரிப்பது, பேசுவது என்று. ஆனால் சகிகல... பல இடங்களில்.
  • கதைநாயகி பிரியா பார்ப்பதற்கு நடிகை மஞ்சு போல இருக்கிறார். இந்த படத்தில் பெருசா சொல்லிக்கொள்ள இவருக்கு ஒன்றும் இல்லை. வழக்கம் போல ஆடி பாட மட்டுமே உதவியிருகார்.
  • முதல் பாதியில் இருக்கும் ஒரு கலகலப்பு, ஆர்பாட்டம் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.
  • ஊர்வசி - நாயகியின் அம்மா. நாடக தனமான நடிப்பு. இவருக்கு வேற கேரக்டர் தரகூடதா எந்த படத்த பார்த்தாலும்...?
  • 'நீயா நானா' கோபி - இங்கேயும் பேசியே ...நம்மை பதம் பார்கிறார்.
  • சம்பத், தலைவாசல் விஜய் - முழுமையாக பயன் படுத்தவில்லை.
வாமணன் - பார்கலாம்

குறிப்பு :
பால்கனியில் ஸ்பீக்கர் சரியாக வேலைசெய்யவில்லை. மேலும் கொசு கடியோடு இந்த படத்தை பார்த்த அனுபவம் மறக்கமுடியாதவை.
இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: