
என்னை கவர்ந்த 'மதுரை சம்பவம்' படத்தின் 'ஒரு இலவம்பஞ்சு போல ...' என்ற பாடல் ஹரீஷ் ராகவேந்திரா மற்றும் சாதனா சர்கம் வசீகர குரல்களில் அந்த பாடல் வரிகள் உங்களுக்காக...
ஹரீஷ் :
ஒரு இலவம்பஞ்சு போலே இதயம் பறக்குது மேலே
ஒரு இலவம்பஞ்சு போலே இதயம் பறக்குது மேலே
ஒரு இறகு பந்து போலே பூமி நழுவது கீழே
மேலே மேலே மேலே மேலே வானம் தாண்டி மேலே
மேலே மேலே மேலே மேலே நிலவும் காலின் கீழே
பிறந்தேன் மறுமுறை - நீ என் இரண்டாம் கருவறை
சாதனா :
ஒரு இலவம்பஞ்சு போலே இதயம் பறக்குது மேலே
ஒரு இறகு பந்து போலே பூமி நழுவது கீழே ......
ஹரீஷ் :
வேறிலா சிலுவையில் பூத்தது பூ ஓன்று
அது போல பூத்தேன் உன்னில் இன்று
சாதனா :
பூனைக்கு காதலும் வந்தது போல் இன்று
சொல்லாமல் தவித்தேன் உன்னுள் இன்று
ஹரீஷ் :
தொடர்கிற ரயில் சப்தம் போல
தூக்கத்தை கலைகிறாய்
சாதனா :
மிதிவண்டி பழகிடும்
ஒரு சிறுவனாய் மோதி விழுகிறாய்...
ஹரீஷ் :
வாழ்க்கையை ரசித்திட கற்று கொடுத்தாய்
காதல் தத்து எடுத்தாய்
என் நெஞ்சுக்குள்ளே நிரந்தர மெத்தையிட்டு நீயும் படுத்தாய்...
சாதனா :
ஒரு இலவம்பஞ்சு போலே இதயம் பறக்குது மேலே
ஒரு இறகு பந்து போலே பூமி நழுவது கீழே ......
சாதனா :
தலைக்கு மேலே
ஒரு காதலின் மேகம் ஓன்று
அது உந்தன் வெப்பத்தால் மழையானதே
ஹரீஷ் :
சாலையின் சத்தத்திலும்
உனது பேரை சொன்னால்
அது எந்தன் சங்கீத இசை ஆனதே
சாதனா :
திருவிழா நெரிசலில்
மனம் தொலைகின்ற குழந்தையாய்
ஹரீஷ் :
கண்ணிரும் இனிக்குதே
காதல் வேதியல் விந்தையா
சாதனா :
காதலும் வேண்டாம் என்று திட்டம்மிட்டேனே
சுட்டி வடம்மிட்டேனே
இன்று உன்னை மட்டும் உள்ளே வர
ஏனோ நானே விட்டுவிடேனே
ஹரீஷ் : ஒரு இலவம்பஞ்சு மேலே
சாதனா : ஒரு இலவம்பஞ்சு மேலே
ஹரீஷ் : இதயம் பறக்குது மேலே
சாதனா : இதயம் பறக்குது மேலே
ஹரீஷ் : ஒரு இலவம்பஞ்சு மேலே
சாதனா : ஒரு இலவம்பஞ்சு மேலே
ஹரீஷ் : ஒரு இறகு பந்து போலே
சாதனா : ஒரு இறகு பந்து போலே
ஹரீஷ் : பூமி நழுவது கீழே
சாதனா : பூமி நழுவது கீழே
ஹரீஷ் :
மேலே மேலே மேலே மேலே வானம் தாண்டி மேலே
மேலே மேலே மேலே மேலே நிலவும் காலின் கீழே
சாதனா :
பிறந்தேன் மறுமுறை
என்னை நான் இளந்தேன் முதல் முறை....
பாடலுக்கு சொந்தகாரர் : யுரேகா
இசை வார்த்தவர் : ஜான் பீட்டர்
நண்பர்களே, நேரம் கிடைக்கும் போது இந்த பாடலை கேட்டு பாருங்க. மறக்காமல் உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க.
- ரங்கோலி.








0 comments:
Post a Comment