முதலில் -
நான் வாசித்த
என் வீட்டை - பற்றி
சொல்ல வேண்டும் .....
மெல்லிய சப்தம் -
காரிருள் -
காற்றும் இல்லை அங்கே -
எங்கு காணினும் - தண்ணீர் !
வீட்டை சுற்றி -
அடுகடுகாய் - பல
மெல்லிய பஞ்சு மெத்தை!
உள்ளே...
பிறந்த குழந்தையின்
பாதம் கலரில்
என் வீட்டின் -
உட்புற வண்ணம்.
என் வாழ் நாளில் -
கிட்டத்தட்ட
நாற்பது வாரங்கள் - நான்
யாரிடமும் - பேசியதில்லை
ஓடி பிடித்து - விளையாடியதில்லை
உட்கார - நினைத்ததில்லை
கொடுத்ததை - உண்டு
மகிழ்வுடன் - வாழ்ந்து வந்தேன்!
நான் தூங்கும் போதும் சரி -
விழித்திருக்கும் போதும் சரி -
யாரோ என்னை
தட்டி கொடுப்பது -
எனக்கு யாரோ
முத்தம் கொடுப்பது -
உணர முடிகிறது - ஆனால்
என்னால் பேச
முடியவில்லை!
அவர்கள் யாரென்று -
என்னால் பார்க்கவும்
முடியவில்லை!
என் மௌனம் கலைக்க
நினைத்தேன் .....
என் கோபத்தை காட்ட நினைத்து
என்வீட்டை - எட்டி
எட்டி உடைத்தேன் -
யாரோ என்னை பார்த்து
திட்டியது போல உணர்ந்தேன்.
யாரென்று - என்னால்
பார்க்கவும் முடியவில்லை!
என் அடாவடி
தினம் தினம் தொடர்ந்தேன் .....
ஒரு நாள் -
என் வீட்டை யாரோ - சிலர்
பெரிய ஆயுதம் கொண்டு - இடித்தார்கள்
என் வீட்டு கூரையை -
இரண்டாய் - பிழந்து .....
தொங்கிகொண்டிருந்த - என்னை
யாரோ தூகினார்கள் வெளியே .....
அம்மா.... ஆ .....
என்ன ஒரு வெளிசம் ..... என்னால்
தாங்க முடியவில்லை - எனக்கும்
ஒரே சப்தம் -
அழுதேன் -
துடித்தேன் -
கதறினேன் -
முதன் முதலாய் -
இந்த உலகத்திற்கு - என் குரல்
ம்மா ....
அட...
இன்று தான் - நான் பிறந்தேன்னோ ?!
என்னை - என்வீட்டிலிருந்து
பிரிப்பதில்
இவர்களுகென்ன
லாபம் ?
மீண்டும் -
வேண்டும் -
என் வீடு.
- தாயிடமிருந்து அறுவை சிகிசை செய்து வெளியே வந்த ஒரு குழந்தையின் புலம்பல் இது !!!








6 comments:
Kanna, it was a heart touching write-up. I was totally freezed except my eyes which beared water drops at its corner while I was nearing the end of the post.
Thanks for you comments BOY. I am proud of you because of your comments.
Its really gud man. Plz avoid the 1 r 2 english words like 'coloril'..while reading the pure tamil words, if any eng words interrupts means then it spoils the flow(I personally feel)...Excellent thought
Excellent Keep it up...
When i am reading your kavithai, i feel little bit vadivel's comedy...
Otherwise it is super kavithaiya!
அழகான கவிதை , ஆழமான அர்த்தம்
அருமையான வார்த்தை உபயோகம்
சிறு சொற்பிழைகள் இருந்தாலும் கவிதையை ரசிக்கமுடிந்தது
நல்ல முயற்சி ...
தொடரட்டும் இது ...
அடுத்த கவிதையை எதிர்பார்க்கும் - ராமையா
உங்கள் விமர்சனக்கள்
உக்குவிக்கும் மருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் வாழ்த்துகளுக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....
Post a Comment