Jun 11, 2009

ஹைகூ கவிதை - வலையில் ரசித்தவை

காதல் - காதலி - மழை

குடைக்குள் மனைவி
பேசிக்கொண்டு நடக்கிறேன்
பழைய காதலியுடன்!


நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது - காதல்!


மிக அழகானது கோபம்
உன் முகம் சிவக்க வைப்பதால்!


குளிர் மழையில் காதலி
என் மனதில் காட்டுத்தீ!


ஆடியில்தான் தேர் வருமென்ற
அம்மாவுக்குத் தெரியாது -
நாளும் நீ என் வீதியைக் கடப்பது!

இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: