Jun 20, 2009

கமலும் விஜய் விருதுகளும்

விஜய் டி.வி. ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்-நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது.

2008-ம் ஆண்டுக்கான விருதுகள் சென்னையில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த விழாவில் ரசிகர்களின் சிறந்த அபிமான ஹீரோவாக நடிகர் கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் நடித்த கமலஹாசனுக்கு அந்தப் படத்தில் பிளெட்சர் என்ற வில்லன் வேடத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் விருதும், பல்ராம் நாயுடு கேரக்டரில் காமெடி செய்ததற்காக சிறந்த காமெடி நடிகர் விருதும், தசாவதாரம் படத்தின் கதையை உருவாக்கியதற்காக சிறந்த கதாசிரியர் விருதும் வழங்கப்பட்டன.

விழாவில் 4 விருதுகளையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு கமலஹாசன் பேசும்போது,

”நான் முதன் முதலில் வில்லனாக நடித்த பிறகே கதாநாயகன் ஆனேன். இந்த வகையில் எனக்கு வில்லன் நடிப்புக்காகவும் விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது.

காமெடியை நான் பாலச்சந்தரிடமிருந்தும், நாகேஷிடமிருந்தும் கற்றுக் கொண்டேன். அந்த வகையில் காமெடிக்கான இந்த விருதினை நாகேஷுக்கும், சக காமெடி கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.


இந்தியாவில் எந்த விருதுக்கும் மதிப்பே இல்லாமல் போனது ஏன் தெரியுமா… அவற்றில் பல ‘வாங்கப்படுவது’ மற்றும் பல உள்நோக்கங்களுடன் ‘தரப்படுவது’. சனிக்கிழமை நடந்த விஜய் டிவி விருதுகளும் அப்படியொரு மோசடி ரகத்தைச் சேர்ந்தவையே.

ஒவ்வொரு கலைஞரை பரிசு பெற அழைத்த போதும் தேவையே இல்லாமல், கமல்ஹாஸன் ரசிகர் மன்ற தலைவர் ரேஞ்சுக்கு ‘உலக நாயகனே, ஆஸ்கார் நாயகனே (?!), உங்கள் முன்னால் விருது வாங்க இவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்…’ என்றெல்லாம் துதி பாட, கமல்ஹாஸனே வெட்கத்தில் நெளிந்தார்.

இந்தக் கூத்துக்கெல்லாம் சிகரம் வைத்தது போல அமைந்தது கமல்ஹாஸனை மையப்படுத்தி இவர்கள் அடித்த தசாவதார கூத்துக்கள்.

இந்தப் படத்துக்கு 6 விருதுகள் கொடுத்தார்கள். ஆறு விருதையும் இவர்கள் கொடுத்த விதம் இருக்கிறதே… எந்த அளவு திட்டமிட்டு கலைஞர்களை இவர்கள் சுரண்டுகிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது!

விழாவின் ஆரம்பத்தில் ஒரு விருது… ஒரு மணி நேரம் கழித்து ஒரு விருது… நிகழ்ச்சியின் மூன்றாவது கட்டத்தில் கமலுக்கு ஒரு விருது, அடுத்து இறுதிக் கட்டத்தில் மூன்று விருது. காரணம்? அப்போதுதானே நிகழ்ச்சி முடியும் வரை அவர் உட்கார்ந்திருப்பார்… டிவியில் 3 பாகங்களாக ஒளிபரப்ப பைட்ஸ் (bytes) கிடைக்கும்!

கமல்ஹாஸனுக்கு சிறந்த வில்லன், சிறந்த காமெடியன், சிறந்த ஸ்கிரிப்ட் ரைட்டர், சிறந்த நடிகர் என பல விருதுகள் கொடுத்தார்கள் இந்த நிகழ்ச்சியில். சிறந்த நடிகர் என்ற பிரிவுக்குள்ளேயே இத்தனையும் அடங்கிவிடும்போது எதற்கு மெனக்கெட்டு இவ்வளவு ஐஸ் வைக்க வேண்டும்… உலக நாயகன் என்று இப்போதும் சொல்லிக் கொள்ளும் கமல்ஹாஸன், இந்த டுபாக்கூர் விருதுக்காக 6 மணிநேரம் குடும்பத்துடன் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

கமல் இன்னும் கடுமையாக, ரஹ்மான் மாதிரி, சரியான சேனலில் முயற்சித்தால் ஆஸ்கார் அவருக்கும் தொட்டுவிடும் தூரம்தான்.

வாழ்த்துக்கள் சார் !!!

இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...