நண்பர் நிவாஸ் புதுசா ஒரு hindi DVD வாங்கிவந்து படம் பார்கலாம் என்றான். மெல்ல பேசி இன்று வெளியான 'மோதி விளையாடு' படத்தை பார்க்க அழைத்து சென்றேன் காரப்பாக்கம் அரவிந்த் தியடருக்கு.
கதை :
கலாபவன்மணி பெரிய தொழிலதிபர். பல நிறுவனங்களை தனது தந்திரத்தால் வாங்கி அவர்களின் வெறுப்பை பெறுகிறார். இவரது சொந்த மகன் வினய் மற்றும் தத்துபிள்ளை ஒரு புது முகம்(பெயர் தெரியல..)
ஒருநாள், விலையுயர்ந்த காரில் வினய் வந்துகொண்டிருக்கும் பொது ஹீரோயின் காஜல் அகர்வால் வீசும் குளிர்பான பாட்டில் வினயின் தலையில் பட்டு கார் விபத்து ஆகி மூன்று லட்சம் வரை செலவாகிறது. இதனை கழிக்க வீட்டு வேலைக்காரியாக வினயின் வீட்டில் இருக்க நேரிடுகிறது(முடியலபா...) காஜலின் அழகில் மயங்கி வினயும், இன்னொரு மகனும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில், தந்தையின் எதிரிகளால் வினய்க்கு வைத்த குறியில் தத்துபிள்ளை இறந்து விடுகிறார். எப்படா இடைவேளை வரும் என்று எதிர்பார்த்த மனசுக்கு ஆறுதலாய் இடைவேளை வந்து விடுகிறது. எங்களை காப்பாற்றியது!!
இடைவேளையில் நான் கேட்ட சில வசனம் :
ஐயோ கதைய சொல்ல மறந்துடேன்... மீதி கதை என்னானா ...
மறுநாள், வினய்க்கிட்டேயிருந்து பாதுகாப்பு, பணவசதி, வேலையாட்கள் இப்படி எல்லா வசதிகளும் பறிக்கப்படுது. ஏன் என்று பார்த்தால் இறந்தவன் தான் உண்மையான மகனாம். வினய் தான் அனாதையாம்(கதையில் ட்விஸ்ட்). எதிரிகளிடமிருந்து மகனைக் காப்பாற்ற வினயை உலகத்துக்கு மகனாக அறிவித்ததாகவும் சொல்கிறார் கலாபவன்(??). எல்லாவற்றையும் இழந்து தெருவுக்கு வருகிறார் வினய்.
இதனிடையே, அகர்வாலிடம் ஜோல்ளிடும் மயில்சாமியிடம் இருந்து அகர்வால் விலாசம் வாங்கி காதல் சொல்ல அவரை தேடி போகிறார். அப்போது தான் தெரிகிறது அகர்வால் பெரிய பணக்காரனின் மகள் என்று. ஹீரோ தனது காதலை சொல்ல உடனே ஏதோ ஒரு பாட்டை போட்டார்கள் ....
நண்பன் நிவாசை பார்த்தேன் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான். மெல்ல எழுப்பினேன். அவனிடம் இருந்து பதில் இல்லை. சரி வா போயிடலாம் என்றேன். உயிர் பிழைத்தால் போதும் என்று எண்ணி தியேடரை விட்டு வெளிய வந்தோம். மீதி கதையை வேற யாரிடமாவது கேட்டு தெரிந்துகொள்ளவும். (நிவாஸ் என்னை மன்னித்துவிடு)
சரண் தான் இந்த படத்தை எடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை. ஏமாற்றத்தைத் தருகிறது 'மோதி விளையாடு' படம்!
நாங்க பார்த்தவரையில் இந்த படத்தில் எனக்கு பிடித்த சில....
பாடலை கேட்டுவிட்டு படம் பார்க்க போகும் என்னை போல பலரும் நொந்தது போயி வெளியே வந்து என்ன செய்யா?.
உங்கள் நண்பர் எவரையெனும் பழி வாங்க நினைத்தால் இந்த படத்தின் டிக்கட்டை தாராளமாக கொடுக்கலாம். அதன் பிறகு உங்கள் நண்பர் உங்கள் வழிக்கே வரமாட்டார்.
மோதி விளையாடு - பெரிய மொக்கை
இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
கதை : கலாபவன்மணி பெரிய தொழிலதிபர். பல நிறுவனங்களை தனது தந்திரத்தால் வாங்கி அவர்களின் வெறுப்பை பெறுகிறார். இவரது சொந்த மகன் வினய் மற்றும் தத்துபிள்ளை ஒரு புது முகம்(பெயர் தெரியல..)
ஒருநாள், விலையுயர்ந்த காரில் வினய் வந்துகொண்டிருக்கும் பொது ஹீரோயின் காஜல் அகர்வால் வீசும் குளிர்பான பாட்டில் வினயின் தலையில் பட்டு கார் விபத்து ஆகி மூன்று லட்சம் வரை செலவாகிறது. இதனை கழிக்க வீட்டு வேலைக்காரியாக வினயின் வீட்டில் இருக்க நேரிடுகிறது(முடியலபா...) காஜலின் அழகில் மயங்கி வினயும், இன்னொரு மகனும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில், தந்தையின் எதிரிகளால் வினய்க்கு வைத்த குறியில் தத்துபிள்ளை இறந்து விடுகிறார். எப்படா இடைவேளை வரும் என்று எதிர்பார்த்த மனசுக்கு ஆறுதலாய் இடைவேளை வந்து விடுகிறது. எங்களை காப்பாற்றியது!!
இடைவேளையில் நான் கேட்ட சில வசனம் :
- கதைநாயகி இடையை ஆட்டி ...சீ ... ஆடி ஓடி ....வரும் காட்சியை பார்த்த போதே அடித்த சரக்கு குப்புனு இறங்கி போச்சுடா மப்பிலே...என்றார் நண்பர் ஒருவர்.
- இந்த படத்துக்கு வந்ததற்கு நேற்று ஓடின 'எங்கள் ஆசானே' பார்த்திருக்கலாம் டா என்றான் ஒருவன்
- நான் அப்பவே சொன்னேன் நீதான் என்னை கட்டாயப்படுத்தி இந்த மாதிரி மொக்கை படத்தை பார்க்க வைகிறே... என்றான் நண்பன் நிவாஸ். காசுகொடுத்து டிக்கெட் வாங்கிய மகராசன் பொரிந்து தள்ளினான். போச்சே 100 ரூபாய் என்றான்.
- ஐயோ இந்த படமும் பிளாப்பா...! எங்கள் 'தல' படம் அடுத்து ...அதுவும் அவளவு தானா ...! என்றான் ஒருவன். அப்போ "அசல்" படத்தோட கதி?
ஐயோ கதைய சொல்ல மறந்துடேன்... மீதி கதை என்னானா ...
மறுநாள், வினய்க்கிட்டேயிருந்து பாதுகாப்பு, பணவசதி, வேலையாட்கள் இப்படி எல்லா வசதிகளும் பறிக்கப்படுது. ஏன் என்று பார்த்தால் இறந்தவன் தான் உண்மையான மகனாம். வினய் தான் அனாதையாம்(கதையில் ட்விஸ்ட்). எதிரிகளிடமிருந்து மகனைக் காப்பாற்ற வினயை உலகத்துக்கு மகனாக அறிவித்ததாகவும் சொல்கிறார் கலாபவன்(??). எல்லாவற்றையும் இழந்து தெருவுக்கு வருகிறார் வினய்.
இதனிடையே, அகர்வாலிடம் ஜோல்ளிடும் மயில்சாமியிடம் இருந்து அகர்வால் விலாசம் வாங்கி காதல் சொல்ல அவரை தேடி போகிறார். அப்போது தான் தெரிகிறது அகர்வால் பெரிய பணக்காரனின் மகள் என்று. ஹீரோ தனது காதலை சொல்ல உடனே ஏதோ ஒரு பாட்டை போட்டார்கள் ....
நண்பன் நிவாசை பார்த்தேன் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான். மெல்ல எழுப்பினேன். அவனிடம் இருந்து பதில் இல்லை. சரி வா போயிடலாம் என்றேன். உயிர் பிழைத்தால் போதும் என்று எண்ணி தியேடரை விட்டு வெளிய வந்தோம். மீதி கதையை வேற யாரிடமாவது கேட்டு தெரிந்துகொள்ளவும். (நிவாஸ் என்னை மன்னித்துவிடு)
சரண் தான் இந்த படத்தை எடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை. ஏமாற்றத்தைத் தருகிறது 'மோதி விளையாடு' படம்!
நாங்க பார்த்தவரையில் இந்த படத்தில் எனக்கு பிடித்த சில....- ஹரிஹரன், லெய்ஸ் கூட்டணியின் இசையில் சில பாடல்களை கேட்க முடிகிறது. மற்றவை ...உங்கள் சாய்ஸ்.
- சந்தானம் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்
- காஜல் அகர்வால் அழகாக எல்லோரும் கவரும் விதத்தில் வருகிறார்
- பாடல்கள் போரடிக்காமல், குறிப்பாக ஒளிப்பதிவு கண்ணை பறிக்கிறது. அவ்வளவு அழகு. அதுவும் வினய் தங்கியிருக்கும் அந்த வீட்டு கொள்ளை அழகு!!!
பாடலை கேட்டுவிட்டு படம் பார்க்க போகும் என்னை போல பலரும் நொந்தது போயி வெளியே வந்து என்ன செய்யா?.
உங்கள் நண்பர் எவரையெனும் பழி வாங்க நினைத்தால் இந்த படத்தின் டிக்கட்டை தாராளமாக கொடுக்கலாம். அதன் பிறகு உங்கள் நண்பர் உங்கள் வழிக்கே வரமாட்டார்.
மோதி விளையாடு - பெரிய மொக்கை
இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.

3 comments:
inimel padathuku polamnu koopuda, appa pathukiren kanan
Its not my mistake BOY. How I know this much worst inside this movie. Due to SARAN & Music only I called you.
:(
Thanks for the warning kannan. :)
Post a Comment