'ஹைகூ'க்களின் தொடக்கம் திருமதி.லீலாவதி அவர்கள் மூலமாக மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு அறிமுகமானது. தமிழுக்குக் ஹைகூக்களை அறிமுகப்படுத்திய இவர். "ஹைகூ என்பது வாழ்க்கை முறை. இயற்கை வழிபாடு. உயிர்களுடன் கொள்ளும் நேச உறவு" என்பது ஹைகூ பற்றிய இவரது எண்ணம்.
தமிழில் ஹைகூ அடங்கிய முதல் தொகுப்பு 'புல்லின் நுனியில் பனித்துளி". இந்த வரிசையில், கவிஞர் இசாக்கின் "மழை ஓய்ந்த நேரம்" தொகுதியைப் பார்க்க நேர்ந்தது. தன் ஹைகூக்களை இயல்பாக விட்டு வைக்காமல் தனது கருத்துக்களை அதன் மேல் சுமத்துகின்ற ஹைகூவோடு துவங்குகிறது தொகுப்பு. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு....

தமிழன் தான்
தமிழனிடம்
ஹலோ
ஆங்கிலத்தில் அறிவிப்பு
இந்திப்பாடலுக்கு நடனம்
தமிழ்ச்சங்க நிகழ்ச்சி
இயல்பே அழகு
தன் மொழியில்
பேசும் கிளி
காட்டு வழிப்பயணம்
துணையாய்
குயில் பாட்டு
வேலிகளுக்கும்
காவல்காரன்
ஓணான்
அடைமழை
தெருவில்
குப்பைகளின் ஊர்வலம்
இந்நேரத்தில்
எது நடந்தாலும் கவலையில்லை
நெடுந்தொடர் - தமிழன்
கனவுகளோடு பறந்தோம்
கனவுகளும் பறந்தன
துபாய் வாழ்வு
இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.

0 comments:
Post a Comment