
தமிழ் திரையுலகில் 'அஞ்சலி'க்கு பிறகு குழந்தைகளை மையப்படுத்தி வந்துள்ள படம் 'பசங்க'. முதலில் இந்த மாதிரி ஒரு முயற்சி எடுத்ததற்கு தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் இருவருக்கும் ஒரு சபாஷ் போடலாம்.
கதை :
புதிதாக பள்ளிக்கு வரும் அன்பரசன் அங்கு ஏற்கனவே பள்ளியில் படிக்கும் ஜீவா இருவருக்கும் முதல் நாளே சண்டை ஆரம்பம் ஆகிறது. அதே பள்ளியில் ஜீவாவின் அப்பாவும் ஆசிரியராக பணியாற்றுகிறார். ஜீவா வால்தனம் மிக்கவன் ஆனால் அறிவு நல்ல புத்திசாலி, ஜீவா கடந்த ஐந்து வருடங்களாக கிளாஸ் லீடர் பதவியில் இருப்பவர் ஆனால் அன்பரசன் வந்த உடன் அந்த பதவியை பெறுகிறார். இதனால் இருவருக்கும் சண்டை ஆரம்பித்து அடிக்கடி அடித்து கொள்கிறார்கள்.
அன்பரசன் சித்தப்பாக்கும் (கூத்து பட்டறை விமல்) ஜீவாவின் அக்காவுக்கும் (நாயகியாக நடிப்பவர் 'சரோஜா'வில் நடித்த வேகா) காதல் மலர்கிறது, அப்புறம் நடுவில் இரண்டு குடும்பத்துக்கும் சண்டை வருகிறது இதையெல்லாம் மீறி அவர்கள் இருவரும் நட்பனார்களா? என்பதே கதை.

இனி படத்தில் நிறைகள் :
- படம் முழுக்க வந்து விழும் நகைச்சுவையும் நையாண்டியும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
- பசங்களுக்குள் நடக்கும் சேஸிங், அடிதடி, பெரிய ஹீரோக்களின்(?) படம் போல் படமாக்கப்பட்டுள்ளது.
- ஜீவாவின் கையாளாக வரும் 'பக்கடா', குட்டிமணி கதா பாத்திரமும் அவர்களது நடிப்பும் மிக இயல்பு. ஏத்தி விட்டே தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளும் 'பக்கடா'அசத்துகிறான்.
- டாக்டர். பாலமுரளி கிருஸ்ணா பாடி இருக்கும் 'அன்பு உண்டாக்கும் வீடு...' பாடலும் அதை படமாக்கி இருக்கும் விதமும் அருமை.
- வேகாவும் விமலும் காதல் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன. இவர்கள் அடிக்கும் செல்போன் ராவடிகளில் தியேட்டரே அதிருது. சிறு புருவத்திலும் நடிப்பை காட்ட முடயும்ணு வேதா மின்னுகிறார்.
- ஜீவாவின் அப்பாவாக வருபவரும் ஆசிரியராக வருபவரும் நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் நபர்களை போல இருபது இன்னும் கூடுதல் சிறப்பு.
- ஓட்டப் போட்டியில் பையனுடன் கூடவே குடும்பமும் ஓடுவது சின்ன கவிதை.
- சைக்கிள் இல்லாமல் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் மகன் ஏங்க, அவனுக்காகவே அப்பா முதல் முறையாக வாழ்க்கையை பற்றி யோசிக்க ஆரம்பிப்பது அருமை. பெற்றோரின் பிரச்சினைகள் எந்த அளவுக்கு குழந்தைகளை பாதிக்கும் என்பதை யதார்த்தமாக சொல்லி உள்ளார்கள்.
படத்தின் குறைகள் :- முதல் பாதி மிக நீளம். இரண்டாம் பாதியில் செண்டிமெண்ட் காட்சிகள் சற்று அதிகம்.
- முதல் பார்வையில் காதலாம் வேதாவும் விமலும்?. இன்னும் எத்தனை படங்களில் தான் காட்டுவீங்க..?
- பின்னணி இசை ஒரே மாதிரி ஒலிப்பது - முடியல.
பசங்க - அப்துல் காலமின் கனவினைதேடி .
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








0 comments:
Post a Comment