
பில்லாவுக்கு அப்புறம் விஷ்ணுவர்தன் இயக்கும் படம் - 'சர்வம்'.
கதை :
ஒருபக்கம், ஆர்யாவும், த்ரிஷாவும் ரேஸ் விளையாட்டில் சந்திக்கிறார்கள். பின்னர் ஆர்யா, த்ரிஷாவை துரத்தி துரத்தி லவ்வு பண்ணுகிறார் .
இன்னொரு பக்கம், நௌஷத் என்பவர் ஏற்படுத்தும் கார் விபத்தில் தன் மகனையும், மனைவியையும் பறிகொடுக்கிறார் வில்லன் ஜே.டி. சக்ரவர்த்தி. நௌஷத் மகன் இமான்-ஐ பழிவாங்கி அதன் வலியை நௌஷத் அனுபுவிக்க வேண்டும் என்று கொலைவெறியோடு தொடர்கிறார் சக்கரவர்த்தி.
ஒரு விபத்தில் காற்றாடியின் மாஞ்சா நூலில் கழுத்தறுபட்டு இறந்துபோகிறார் த்ரிஷா. அவரின் இதயம் சிறுவன் இமானுக்குப் பொருத்தப்படுகிறது. காதலியை இழந்து தவிக்கும் ஆர்யா, இமான் வழியாக த்ரிஷா வாழ்வதாக நினைக்கிறார். சிறுவனை கொல்ல வெறியோடு அலையும் வில்லனிடமிருந்து ஹீரோ அவனைக் காப்பாற்றுகிறாரா என்பதே க்ளைமாக்ஸ்.
இனி படத்தில் நிறைகள் :
- உடல் உறுப்பு தானம் பற்றிய கதை சொல்லும் படம்
- இளையராஜா இசை அமைத்த பாடல் ஒற்றை காதல் காட்சிகளுக்கு உபயோகித்த விதம் அருமை. இளையராஜா ரகுமான் இசை விவாதம் எநோ?
- பாடல்களும் அதன் நடன அமைப்புகளும் மிக அருமை
- மிக மிக ஸ்டைலிஷான படமாக்கம், துல்லியமான ஒலிப்பதிவு
- பின்னணி இசையில் பின்னுகிறார் யுவன்சங்கர்ராஜா.
- த்ரிஷா படத்தில் அழகாக இருக்கிறார். நடிக்க பெருசா ஒன்றும் இல்லை படத்தில்.
- த்ரிஷா இறந்த பிறகும் ஹீரோவோடு டூயட் ஆடுவது..... முடியல.
- வில்லன் சிறுவனை கொல்ல துரத்தும் காட்சிகளில் எரிச்சலே மிஞ்சுகிறது
- படத்தின் மிகபெரிய பலவீனம் திரைக்கதை. படம் ஆரம்பித்து பத்தாவது நிமிஷத்திலே படத்தின் கதை புரிந்து விட்டது. திரைக்கதையும் புரிந்து விட்டது. பிறகு படத்தின் காட்சிகளாவது நம்மை கவரும் என்ற ஆவலுடன் உங்கர்த்திருப்பது தான் மிச்சம்.
- மண்ணில் புதைக்கப்பட்ட ஹீரோ பூமியைப் பிளந்து வந்து சண்டைப் போடுவதெல்லாம்... அட போங்க இத பத்தி நான் என்ன சொல்ல?.
- அந்த சின்ன பையன் இம்சை தாங்க முடியுல, அவன் வேற வந்து மொக்கை போடுறான்.
ஒரு காட்சியில், த்ரிஷாவை மடக்க ஆர்யா 9-vathu மாடியில் இருந்து குதிக்க போறதா சொல்வார். அப்போது அவர் நண்பர் போன் செய்து "டேய் சிம்பு படத்துக்கு டிக்கெட் எடுத்து வெச்சிருக்கேன் எங்கட இருக்க ?" உடனே ஆர்யா "நான் ஒன்பதாவது மாடியில் இருந்து குதிக்க போறேன்" உடனே நண்பர் பதறி சிம்பு படம் வேணாம்டா அப்போ அஜித் படத்துக்கு போலம்ட" என்பார். இந்த காட்சியில் திரைஅரங்கில் பயங்கர கைதட்டு. அஜித் படத்துக்கு போறதுக்கு ஆர்யா எதோ சொல்வார் என் காதில் விழவில்லை. யாரை கவர இதெல்லாம்? விஷ்ணுவர்தன் இந்த மாதிரி ஒரு படம் எடுப்பார்னு நினைச்சி பாக்கல.
இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








0 comments:
Post a Comment