ரோஜாவை எடுத்து நீட்ட
உன்னைவிட அழகாய்
வெட்கத்தில்
சிவக்கக் தெரியவில்லை
ரோஜாவுக்கு...!
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!
வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








2 comments:
all the kavidhai's are superb...
வார்த்தைகள் இல்லை கண்ணன்... ஒற்றை வார்த்தையில் "அழகு"
word verificationஐ எடுத்துவிடுங்களேன்
Post a Comment