Jun 10, 2009

ஆடாத ஆட்டமெல்லாம் -திரை விமர்சனம்


கதை :
கும்மாளம் படத்தில் அறிமுகமான நம்ப ஹீரோ ரவிகணேசும் ஜெனி ஜாஸ்மினும் (நடிகை மீரா ஜாஸ்மீனின் அக்கா) பாசமிக்க தம்பி அக்கா. வசதியான குடும்பத்தில் பிறந்து சின்ன வயதிலேயே பெற்றோரையும், அந்த வசதியையும் இழந்துவிடும் ஜெனியை துரத்தி துரத்தி காதலிக்கிறார் ரிஷி(TV நாடக நடிகர்). தம்பிதான் முக்கியம் என்று காதலையும் திருமணத்தையும் மறுக்கிறார் ஜெனி. கடைசியில் தம்பியையும் கூட வைத்துக்கொள்வதாக இருந்தால் திருமணம் என்று இறங்கி வருகிறார். அதற்கு மாமியார் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் மனம் வெறுத்துப் போகும் ரவி, நண்பர்கள் வர்புறுதியதர்காக காலேஜ் ஹாஸ்டலில் தங்கி பிறகு போதைக்கு (கஞ்சா, தண்ணி, தம்மு) அடிமையாகிறார். அந்தப் பழக்கத்தால் கல்லூரி படிப்பும பாழாகிறது. இறுதியில் அவர் எடுக்கும் முடிவால் க்ளைமாக்ஸ் கண்கலங்க வைக்கிறது.

இனி படத்தில் நிறைகள் :
  • போதைப் பொருள் பழக்கம் ஒருவரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சீரழிக்கும் என்று மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.
  • கொஞ்சமே வந்தாலும், போலீஸ் மன்சூர் அலிகான் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்.
  • ஸ்ரீநாத் - சில இடங்களில் நன்றாக சிரிக்க வைத்திருக்கிறார். நல்ல எதிர்காலம் உண்டு இவருக்கு.
  • ரவி கணேஷ், போதை மருந்து காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார். மற்றபடி ஒன்றும் பெருசா சொல்லிக்கொள்ள எதுவுமில்லை.
  • ஏ.ஆர்.ரஹ்மானின் சகோத‌ரி ஏ.ஆர். ரெஹனா இசையமைத்துள்ளார். "அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான் பாடலை அழகான பொண்ணுடா, அதுக்கேத்த கண்ணுடா, அவஸ்தைகள் அதிகமானா எஸ்எம்எஸ் பண்ணுடா..." என வார்த்தைகளை சிறிது மாற்றி ‌ரீமிக்ஸ் செய்துள்ளனர். Superb!

படத்தின் குறைகள் :
  • காதலியாக வரும் பாரதியை சில காட்சிகளில் துகிலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். இவரை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.
  • கதாநாயகனின் நடிப்பை ஆராய ஒரு கமிட்டீ வைக்கலாம்.
  • ஜெனி ஜாஸ்மி ஓவர் ஆக்டிங் பண்ணி, ஒரேயடியாக அழுது புரண்டு நம்மை கொலை செய்ய பலஇடங்களில் முயகிறார்.
  • நல்ல கதை களம் கையில் எடுத்த டைரக்டர் இன்னும் சற்றே கூடுதல் கவனம் செலுத்தி திரை கதையை சொல்லியிருக்கலாம். பல இடங்களில் ஏடா இந்தமாதிரி படங்களில் எடுகிறீங்க -னு சொல்ல வைக்கிறது. போங்கயா முழுசா படிச்சுட்டு வாங்க....!

படத்துல ஒரு சீன் என்னை மிகவும் கவர்தது. அது போடும் THE END போடும் முன்னர் ஒரு வசனத்தை போட்டார்கள் அது உங்கள் பார்கைக்கு ...

பாசத்தை இவன் மறந்து
பாதை மாறினான்!
போதை பழக்கத்தினால் மிருகம் ஆகினான்!
சொர்க்கம் போன்ற வாழ்க்கையை
நரகமாகினான் !
இவன் வாழ்க்கை எல்லோருக்கும்
ஒரு பாடம் !
இதை புதலில் போடிருந்தால் தியேடரை விட்டு வெளியே போயிருப்பேன்.

குறிப்பு :

நேற்று இந்தியா - அயர்லாந்து கிரிகெட் T20-20 போட்டியை பார்க்க முடியாமல் இந்த திரைப்படத்தினை பார்க்க நேர்ந்தது. இப்படி ஒரு படத்தினை பார்க்க வைத்த அந்த இறைவனை (GOD)ஒன்னும் சொல்லமுடியல. என்னை சோதிகவே இந்த படத்தை பார்கவைத்தார் போல தெரிகிறது. இந்த தேர்வில் நான் வெற்றிபெட்டுவிடேன்-னு நினைக்கிறன்.

ஆடாத ஆட்டமெல்லாம்
தியேட்டரில் இருந்து ஓடாத ஓட்டமெல்லாம் ஓடும்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...