
காதலில் விழுந்த ஒருத்தி தன் காதலனுடம் பழகிய நிமிடங்களை நினைத்து பாடும் ஒரு மெல்லிசை பாடல் முதல் முறையாக இணைய தளத்தில் ....
மாலை நேரம் மழை தூறும் காலம்
என் சன்னல் ஓரம் நிற்கிறேன்!
நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம்போலே மிதக்கிறேன்!
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணக்கள் தொடர்கிறேதே !
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே !
காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஓன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இது தருமே ...
முன்கனம் கோர்கையில் நினைவு - ஓராயிரம்
நின் இருகரம் பிரிகையில் நினைவு - நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜக்கள் மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீயில்லை தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது நான் என்ன இழந்தேன் என - ஒ
காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஓன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
ஒரு முறை வாசலில் நீயாய் வந்ததால் என்ன
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன
இரு மனம் சேர்கையில் பிழை பொறுத்து கொண்டால் என்ன
இரு திசை பறவைகள் இணைந்து விண்ணில் சென்றால் என்ன
என் தேடல்கள் நீயில்லை உன் கனவுகள் நானில்லை
இருவிழி பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன
மாலை நேரம் மழை தூறும் காலம்
என் சன்னல் ஓரம் நிற்கிறேன்!
நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம்போலே மிதக்கிறேன்!
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணக்கள் தொடர்கிறேதே !
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே !
காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஓன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே அன்பே
இது தருமே ...
படம் : ஆயிரத்தில் ஒருவன்
இயக்கம் : செல்வராகவன்
இசை : G.V.பிரகாஷ் குமார்
நேரம் கிடைக்கும் போது சற்று கேட்டு தான் பாருங்களேன் இந்த பாடலை !
இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி








1 comments:
இதை விட "தாய் திண்ற மண்ணே" பாடல் மிக அருமை. அதை வெளியிடலாமே.
Post a Comment