அந்த ஒரு மழைக்கால மாலையில் கடைவீதியில் பார்த்தேன் அவளை. சரியாக ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக, ஆர்ப்பரிக்கும் கடற்கரை சத்தத்தில் "விதியிருந்தா மறுபடியும் பார்ப்போம்" என்று சொல்லி விடைபெற்றது ஏதோ நேற்று நடந்தது போல் இருந்தது எனக்கு. அவள் நினைவுகளுடன் வாழும்போதே காலம் இந்த ஓட்டம் ஓடுகிறது. அவளுடனே வாழ்ந்திருந்தால்? அவள் பேரைக் கேட்க நேரிடும் பொழுதுகளில் மனம் கணத்துவிடும். நேரில் பார்த்தால்.. விரட்ட விரட்ட சேரும் தூசியைப் போல்தான் அவள் நினைவுகள். அவளுடன் இருந்த பொழுதுகளை அசைபோட்டால் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கண்ணீரிலோ அல்லது ஒரு புன்னகையிலோ அல்லது இரண்டுமற்ற ஒரு மாய நிலையிலோ நிறைவுப் பெற்றிருக்கிறது . அவள் காதல் ஒரு நிரந்தர ஈரத்தை என் உடல் அணுக்களில் ஊறவைத்துவிட்டன. இந்த சந்திப்பை மறக்க இன்னும் எத்தனைக் காலமோ? அவள்தான் வீட்டிற்கு அழைத்தாள். என் உயிர் அழைக்க உடல் பின்னாலே சென்றது.
விடாமல் பேசினாள். அவள் கணவனின் சமீபத்திய பதவி உயர்வு, மாமியாரின் கணிவு, பிள்ளையின் அறிவு, என எல்லாம் நல்லபடியாக இருப்பதாக பெருமைப்பட்டாள். அவள் எப்படி இருக்கிறேன் என்றோ நான் எப்படி இருக்கிறேன் என்றோ மறந்தும் பேசவில்லை. லேசாக வலித்தது என் சிறு இதயம்.
சாப்பிட சொன்னாள். "மனசு நிறைஞ்சுடுச்சு" என்று சொல்லி வந்துவிட்டேன். தூறல் என்னை நனைத்தது. எனக்காக வானம் அழுவதாய் நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த போதுதான் என் மூக்கு கண்ணாடியை மறந்து விட்டதைக் கண்டேன். மீண்டும் அவளின் வீட்டிற்குச் சென்றேன். என் கண்ணாடியை அணிந்துக் கொன்டு கண்ணாடி முன் நின்றுக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் வெடுக்கென கழட்டி தந்தாள். வார்த்தை பேசாமல் வெளியே வந்த போதுதான் பார்த்தேன், மூக்கு கண்ணாடியின் இரு முனைகளிலும் முத்து முத்தாய் தேங்கியிருந்தது அவளின் இரு சொட்டுக் கண்ணீர். வெளியே வந்தபோது மழை நின்றிருந்தது.
".... விழியோரமாய் ஒரு நீர்த்துளி
வழியுதே என் காதலி அதன்
ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் .... "
- பாடல் எங்கோ ஒலித்துகொண்டிருந்தது.
இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








12 comments:
Nice :)
Thanks Ram!
Please visit this URL.
http://www.karkibava.com/2009/06/blog-post_17.html
Labels: சிறு கதை, படித்ததில் பிடித்து
எங்க பிடிச்சதுன்னும் இணைப்பு கொடுத்திருந்தா இன்னும் அசத்தலா இருந்திருக்கும் :)
ஒட்டுக்கா ஒரு க்ரூப்பா கிளம்பிருக்கிங்களாப்பு?
//இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.//
அன்பின் ரங்கோலி,
எங்கே இருந்து எடுத்துப் போட்டீங்கனு அந்த லிங்கையும் குறிப்பிடுங்க எப்பவுமே!
உங்க ரசனையை நான் மிகவும் பாராட்டுக்கிறேன்! கார்க்கியின் இந்தக் கதை எனக்கும் மிகவும் பிடித்திருந்தது!
//
Kannan said...
Thanks Ram!
//
Why thanks for copying someone else's post? I can't understand
கண்ணன்,
பக்கத்து வீட்டுல இருந்து வேறொருத்தன் பையனை/பெண்ணை உங்க வீட்டுல கொண்டு போய் வச்சு " இது என் குழந்தை " அப்படின்னா உங்களுக்கு சந்தோஷமா இருக்குமா என்ன ? அது மாதிரி தாங்க.. மத்தவங்க படைப்பை அவங்க அனுமதி இல்லாம, அட்லீஸ்ட் குறைஞ்ச பட்ச நாகரீகமா அவங்களோட லின்க் கூட போடாம எடுத்து தன் பதிவில் போடறது ...
படிச்சவங்க நீங்க.. யோசிச்சு பாருங்க.. நான் சொல்றது சரியா தப்பான்னு புரியும்.
ஏங்கன்னு இதெல்லாம் ஒரு...###..?
அட, இன்னும் இந்த போஸ்ட்டை எடுக்கலையா... நான் கூட எடுத்துட்டீங்களோன்னு நெனச்சேன்.. நீங்க ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்லவன்னு நெனக்குறேன்..
டெம்ப்ளேட் நெம்ப நல்லாயிருக்கு அண்ணே!
அப்படியே சொந்தமா எதுனா போடுங்க (நம்மள மாதிரி மொக்கையா இருந்தாலும் சரிதேன்)
அடுத்தவர் படைப்பை போட்டா - குறிப்பு கொடுங்க, சுட்டியையும் கொடுத்தா நீங்க அர்ஜுன் என்று ஒத்து கொள்கிறோம்
(அட அதான்ப்பா ஜெண்டில் மேன்)
அருமையான சிறுகதை என்பதை ஏற்கனவே எழுதிய எழுத்தாளருக்கு சொல்லிவிட்டேன்.
உங்களுக்கு..
வேற எதுனா ட்ரை பண்ணுங்க பாஸு!
Post a Comment