Jun 19, 2009

சிறு கதை - அனுதாப வெற்றி

வித்தியாவும், ப்ரியாவும் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு ஷாப்பிங் செய்ய தி. நகரிலுள்ள உஸ்மான் சாலைக்கு கிளம்பினார்கள். "ப்ரியா இன்னிக்கு எவ்வளவு பெட்" என்றாள் வித்தியா. அதற்கு ப்ரியா "முதல்ல நீ ஜெய்துக்காட்டு அதற்கு பிறகு பார்க்கலாம்" என்றாள்.

"ஸ்டிக்கர் பொட்டு அஞ்சி ரூபாய் … ஸ்டிக்கர் பொட்டு அஞ்சி ரூபாய்" என்று சாலை ஓரமாக கூவிக் கொண்டிருந்தார் ஒரு சிறு வியாபாரி.

ப்ரியா ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு ஒரு பாக்கெட் ஸ்ட்டிக்கர் பொட்டு வாங்கிக் கொண்டாள். சற்று தூரம் அவர்கள் சென்றதும். "ப்ரியா இதோ பார்" என்று தன்னிடமுள்ள ஒரு ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்டை காட்டினாள் வித்தியா. "வாவ்… இன்னிக்குப் போட்டில நீ ஜெய்ச்சுட்டப் போ" என்றாள் ப்ரியா.

அந்த ஸ்டிக்கர் பொட்டு வியாபாரி தன் சக வியாபரியிடம் "இன்னிக்கு முழுசா எல்லா பொட்டையும் வித்தா ஐம்பது ரூபாய் வராது. அந்த இரண்டு பிள்ளையையும் பார்த்தா நல்லா படிச்சிருக்கவங்க மாதிரி இருக்காங்க, எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு ஒரு பாக்கெட் பொட்டை எடுத்துட்டாங்க. நாலுப் பேருக்கு மத்தியில நான் கேட்டா அது அவங்களுக்கு அசிங்கமுன்னு விட்டுட்டேன். அஞ்சி ரூபாயில நான் என்ன கோட்டையா கட்டப் போறேன் சார்" என்று கூறிவிட்டு தன் வியாபாரத்தைத் தொடர்ந்தார்.

வித்தியா பெற்ற வெற்றி வியாபாரி அனுதாபப்பட்டு கொடுத்த வெற்றி.

இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

2 comments:

Praveen V Nair said...

Nice message man. Its very silly of people to play around with others life.

Kannan said...

Thanks Nair.