Apr 25, 2009

'த நா-07-அல 4777' - திரை விமர்சனம்


இந்தியில் டாக்ஸி நெ.9211 என்கிற பெயரில், நானா படேகர் நடித்த வெளிவந்தது, இதனின் தமிழ் பதிப்புத் தான் 'த நா-07-அல 4777.' படத்தின் தலைப்பைப் போலவே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் இது.

கதை :

கோடீஸ்வரர் மகன் அஜ்மல். ஊதாரித்தன பேர் வழி. அவர் நடவடிக்கைகள் தந்தைக்கு எரிச்சலூட்டுகிறது. அஜ்மல் பெயரில் உள்ள ஐநூறு கோடி ரூபாய் சொத்துக்களை நண்பர் பெயருக்கு மாற்றி விட்டு சாகிறார். அதிர்ச்சியாகும் அஜ்மல் சொத்துக்களை மீட்க கோர்ட்டுக்கு போகிறார்.

சாதகமான உயிலை வங்கி லாக்கரில் இருந்து எடுக்கிறார். அதனை கோர்ட்டில் தாக்கல் செய்ய பசுபதியின் டாக்சியில் செல்கிறார். டாக்சி மெதுவாக செல்ல பதட்டமாகிறார். காரை வேகமாக ஓட்ட பசுபதிக்கு பணத்தை அள்ளி கொடுக்கிறார். பண ஆசையில் காரை வேகமாக ஓட்ட விபத்தாகிறது. பசுபதி கைதாகிறார். அஜ்மல் அங்கிருந்து நழுவி விடுகிறார். அப்போது வங்கி லாக்கர் சாவி காரில் தவறி விழுகிறது. அதை பசுபதி எடுத்துக்கொண்டு அஜ்மலிடம் தர மறுக்கிறார். இதனால் பகையாகின்றனர். இந்த மோதல் அஜ்மல் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்துவது கிளை மாக்ஸ்.
இனி படத்தில் நிறைகள் :
  • கா‌ர்‌ டி‌ரை‌வர்‌ பசுபதி‌க்‌கும்‌, தந்‌தை‌ சொ‌த்‌தை‌ தனதா‌க்‌க முயலும்‌ அஜ்‌மலுக்‌கும்‌ இடை‌யே‌ நடக்‌கும் கோ‌பம்‌, மோ‌தல்‌, பழி‌வா‌ங்‌கல்‌ என இழுத்‌த கடை‌சி‌யி‌ல்‌ இருவரும்‌ பணத்‌தை‌ வி‌ட மனி‌த நே‌யமே‌ பெ‌ரி‌து என உணர வை‌க்‌கி‌றது படம்‌.

  • இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பாடலில் ஏற்கனவே ஹிட்டான சுராங்கணியின் மறுபதிப்பான ஆத்திச்சூடி ஹிட்.

  • டா‌க்‌சி‌ டி‌ரை‌வரா‌க , பொ‌ய்‌யு‌ம்‌, குடி‌யு‌ம்‌, சண்‌டை‌யு‌ம்‌, மனை‌வி‌யி‌டம் கெ‌ஞ்‌சலுமா‌க படம்‌ முழுக்‌க ஓட்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ பசுபதி‌.

  • எதி‌ர்‌பா‌ர்‌ப்‌பு‌ள்‌ள குடும்‌பத்‌ தலை‌வி‌யா‌க சி‌ம்‌ரன்‌. நடுத்‌தர ஏழை ‌குடும்‌பத்‌தி‌ன்‌ பி‌ரச்‌சனை‌களை‌ தனது முகபா‌வ பே‌ச்‌சா‌ல்‌ பதி‌யவைத்‌துள்‌ளா‌ர்‌.

  • மனோ‌பா‌லா‌ நகை‌ச்‌சுவை‌ கா‌ட்‌சி‌கள்‌ சி‌ரி‌ப்‌பொ‌லி‌.

படத்தின் குறைகள் :
  • அஜ்மல் ஜோடியாக மீனாட்சி நடிக்கிறார். பா‌வம்‌ மீ‌னா‌ட்‌சி‌. பா‌டல்‌கா‌ட்‌சி‌களுக்‌கு மட்‌டுமே‌ பயன்‌ பட்‌டி‌ருக்‌கி‌றா‌ர்‌. மீனாட்சி கவர்ச்சி கலக்கல்.

  • கோப கொடுக்குடன் தி‌ரியும் அ‌ஜ்மலிடம் பெ‌ரிதாக எதுவும் தேறவில்லை. அடிக்கடி பசுபதியை நினைத்து உறுமிக் கொள்வதுடன் முடிந்து போகிறது அவரது வேலை.

  • கிளைமாக்சில் திடீர் நண்பர்களாவது ஒட்டவில்லை.

ஒரு முறை பார்க்கலாம் முடிந்தால். வித்தியாசமான பட வரிசையில் இதுவும் ஓன்று.


நன்றி :
Office லீவு விட்டதால இந்தமாதிரியான படங்களை பார்க்க நேரிடுகிறது. அதையும் blog-லே போடவேண்டியதா இருக்கு. என்ன செய்ய...?!.

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: