Apr 13, 2009

லாடம் - திரை விமர்சனம்

இரண்டு பெரிய(?) தாதாக்களுக்கு(பாவாடையாக கோட்டா சீனிவாசராவ், வேம்புலியாக ஜெயப்பிரகாஷ்) நடுவே தேவையில்லாமல் மாட்டிக்கொள்கிற ஒரு படித்த இளைஞனின் கதைதான் "லாடம்".

ஊரிலிருந்து சென்னையில் வேலைக்கு சேருவதற்காக வந்த குஞ்சிதபாதம் (நம்ப ஹீரோபேரு) என்கிற இளைஞனை, அவன் தங்கியிருந்த ரூமில் உள்ள சுப்ரமணித்க்கு பதிலாய் “பாவாடை சாமி’ என்கிற ஒரு ரவுடியின் கும்பல் தூக்கி கொண்டு போகிறது.

பாவாடை சாமியின் எதிரியான வேம்புலி பாவாடையின் மகனை போட்டு தள்ளிவிட, வேம்புலியை அழிக்க பாவாடையால் அனுப்பப்படும் ஆட்கள் எல்லாம் இறந்து போய் போட்டோவாக வர, தன் ஓட்டை வாயால் ஐடியா கொடுக்கிறேன் பேர்விழி என்று நம்ம குஞ்சிதபாதம் மூளையை யூஸ் பண்ணனும் என்று எதையோ 20-80% கதை ஒன்றை சொல்ல, 16 நாளுக்குள் தன் எதிரி வேம்புலியை அவன் தான் கொல்ல வேண்டும், அப்படி கொல்லாவிட்டால் 17 அவனுக்கு பால் என்கிறான்.

சில நிமிடத்திலேயே எதிர் வீட்டு வேம்புலியிடமும் மாட்டி விடுகிறான். வேம்புலி அவனை உயிரோடு புதைக்க, அவன் அதிலிருந்து தப்பித்தானே..? 16ஆம் நாள் வேம்புலியின் மகனை கொன்றானா..? இடையில் அவனுக்கு சார்மிக்கு ஏற்படும் காதல் என்னவாயிற்று என்பது தான் கதை என்று சொல்லியிருக்கிறார் நம்ப 'கொக்கி' பிரபு சாலமோன்.

இனி படத்தில் நிறைகள் :
  • நம்ப ஹீரோ(அரவிந்த்) அப்பாவின்னா அப்பாவி... அப்படியொரு அப்பாவி.. MCA Gold Medalist-ஆம்? தன் பாத்திரம் உணர்ந்து நடித்து நம் மனதில் பச்சக் என பசை போட்டு ஒட்டிக் கொள்கிறார்.
  • படத்தை தாங்கி நிற்பவர் ஒளிப்பதிவாளர். மனுஷன் சும்மா பின்னி எடுத்திருக்கிறார். முழு திறைமையையும் வெளிப்படுத்தியிருக்கும் சுகுமாருக்கு ஒரு சபாஷ்.
  • சின்ன உதட்டுச் சுளிப்பில் கூட வில்லத்தனத்தைக் காட்டுகிற கோட்டா சீனிவாசராவ் நடிப்பிலும் தாதாதான்.
  • சிட்டிபாபு - சப்இன்ஸ்பெக்டர். தப்பியோடி வரும் ஹீரோவையும், ஹீரோயினையும் காதலர்கள் என்று நினைத்து போலீஸ் ஸ்டேஷனில் திருமணம் செய்து வைத்து புண்ணியம் தேடும் கேரக்டர். ஒரே ஒரு காட்சியில் மனோரமா வந்து போகிறார். கதை ஓட்டத்தில் இவர்களின் பங்கு என்ன?


படத்தின் குறைகள் :

  • இசையமைப்பாளர் தரனின் இசை பெரிதாய் எதையும் செய்யவில்லை. ஒரு பாடல்கூட மனதில் நிற்கவில்லை. முதல் இரண்டு பாடல்கள் எதற்காக வருகின்றன?
  • ஏஞ்சல்-ஆக சார்மி. பகலில் மார்க்கெட்டிங் செய்வதைப் போல் வீட்டை நோட்டம் விட்டுவிட்டு அந்தி சாயும் நேரம் வந்தவுடன் ஆள் இல்லாத வீட்டில் கள்ளச் சாவி போட்டு உள்நுழைந்து அந்த இரவில் மட்டும் தானே சமைத்து, சாப்பிட்டு, உறங்கி, எழுந்து செல்லும் ஒரு வித்தியாசமான கேரக்டர். பெரிய லொட... லொட வாய். பல இடங்களில் அறுவையால், தியேடரில் உங்கார முடியல.
  • போதாக்குறைக்கு மிமிக்ரி பண்ணுகிறேன் என்று சார்மி அடிக்கடி பயமுறுத்துகிறார்.
  • சர்மிளியை எந்தக் கோணத்தில் பார்த்தால் அசிங்கமாகத் தெரிவாரோ, அதே கோணத்திலேயே இவரைப் படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளரின் தைரியத்திற்கு ஒரு சல்யூட் அடிக்கலாம்.
  • கதையில் ஏதாவது திருப்புமுனை இருக்கும் என்று கடைசி வரை எதிர்பார்க்க வைத்ததுதான் மிச்சம்.
  • டுபாக்கூர் போலீஸ் சிட்டிபாபு, டுபாக்கூர் அமைச்சர் வாசு விக்ரம் என ரீலோ.. ரீல்!

கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..! அப்புறம் தியேட்டரோடு மறந்துவிடலாம்..!

குறிப்பு:
படம் பார்க்க உதவிய நண்பன் கார்த்திக்கு இது சமர்ப்பணம்.

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

1 comments:

Wind Sailor said...

I too heard that, the film is somewhat good....vijay padathuku poi thanda sellavu pannrathai vida v can prefer this movie...