உன்னை அம்மா
இழுத்துப் போக
சோவென அழத்தொடங்கியது
மழை!
சைவமான என்னை
அசைவமாக்கிப் போகிறது
உன் மேல் விழும்
மழைத்துளி!
ஊரிலிருந்து
நீ வருவாயென
நேற்றே வந்து
வாசல் தெளித்துப் போயிருந்தது
மழை!
மழை நின்ற
கணத்தின் இலைப்போல்
முகமெல்லாம்
திட்டுத்திட்டாய்
உன் முத்தங்கள்!
நீ மழையாக
நான் துளியாக
மெல்ல பொழியட்டும்
காதல்!
குழைந்தைகளுடன்
நீ நனைந்திருக்க
குதூகலமாய்
பொழியத் தொடங்கியது மழை!
மின்னல்
மழையின் கிறுக்கலென்றால்
உன் விரல்
என்மேல் வரைந்ததை
என்னென்பது?!
இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை கவிதையாய் நீங்களும் என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








3 comments:
அருமையான கவிதை ரங்கோலி!
எழுதிய ப்ரியன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!
http://priyanonline.com/?p=408
(கவிதைகளை காப்பி செய்து போடும்போது ஆர்டர் மாறாமல் அப்படியே நகலெடுக்கவும்)
அருமையான கவிதை ரங்கோலி!
எழுதிய ப்ரியன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!
(கவிதைகளை காப்பி செய்து போடும்போது ஆர்டர் மாறாமல் அப்படியே நகலெடுக்கவும்)
நன்றி தோழரே...
Post a Comment