Apr 3, 2009

மழை ஓய்ந்த நேரம் - சில கவிதை துளிகள்

  • சாய்ந்தது மரம்
    நின்றது மழை
    ஈரமில்லாத மனிதன்.

  • இணை தேடி வருமா
    காணமல் போன
    கொலுசு.

  • திருவிழா வாணவேடிக்கை
    பயந்து பறக்கிறன
    புறாக்கள்.

  • விபத்துக்கு உள்ளாகி நிற்கும்
    பேருந்து முழுக்க
    புளியம் பூக்கள்.

  • ஆள்கள் மாறிக் கொள்கிறார்கள்
    அய்யோ பாவம்
    உழவு மாடுகள்.

  • எப்போதும் இருளாய்
    மின் கம்பிகளில்
    குருவிக்கூடு.

  • ஊர்திப்புகை
    மூச்சுத் திணரும்
    செடிகள்.

  • பாலைவனச் சூடு
    நெடுந்தூரப்பயணம்
    எங்கே இளைப்பாறும் நிழல்?

  • சமாதிக்கு மட்டுமன்று
    பூக்களுக்கும்
    மலர் வளையம்.


இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

1 comments:

(¯`·._.·NIVAS·._.·´¯) said...

Pookalukey valaiyam vathuvittaye kanna!!! kavithai nunru