Apr 17, 2009

என்ன பிழை செய்தோம் ?

கணினி துறையில் உள்ளவர்களின் வாழ்க்கை நிலைப்பாடு மிகவும் திண்டாட்டமே. அதனை மிகவும் கொண்டாட்டத்துடன் எழுதிய புலவனை....ஒன்னும் பண்ணமுடியாது. இது அவனது தொழில்... நான் என்ன சொல்ல....?

நீங்களும் படித்துதான் பாருங்களேன் ...


கற்றதினால் ஆனா பலன்

எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரித்தீர்கள்

கலாச்சாரத்தை கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைதீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்

எங்கள் சம்பாத்தியத்தின்
பெரும் பகுதியை வரி எனப் புடுன்கிநீர்கள்
நாங்கள் அன்னிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில் பாலங்கள் கட்டினீர்கள் "இந்தியா ஒளிர்கிறது" என
விளம்பரம் செய்தீர்கள்

இதோ கும்பல் கும்பலாக நடுத்தெருவுக்கு
வந்துவிட்டோம் - சந்தோசம் தானே சதோதரர்களே ?
உங்கள் சட்டையைபற்றிக்
கேட்கிறோம் ....
"கணினீ மொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம் ?"

நன்றி : செல்வேந்திரன்


இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

3 comments:

Ramaiah said...

சபாஷ்!!!
கணிணி துறையில் தற்போது நிலவும் உண்மையான நிலவரம்...

Raja said...

Super kannan, it shows all the ITien's feelings

ganesh said...

I was about to take copy of this when I read it in Ananda vikatan few weeks back.