Apr 20, 2009

சூர்யா - ஒரு ரியல் ஹீரோ


சமீபத்தில் அயன் பிரஸ்மீட் ஒன்றில் சூர்யாவிடம் ஒரு நிருபர், "இளைய தளபதி, புரட்சித் தளபதி போன்ற பட்டம் ஏன் உங்களுக்கு இல்லை?" என கேட்டுள்ளார்.

அதற்கு சூர்யா "தளபதி, தலைவர் போன்ற பட்டப் பெயர்கள் எனக்குப் பிடிக்காது. தமிழ் திரைக்காக ஏற்கனவே சரவணன்-னிலிருந்து சூர்யா-விற்கு மாறிவிட்டேன். மேலும் சூர்யாவிற்கு முன்னர் எந்த பட்டப்பெயரும் சரியாக எடுபடாது. எனது ரசிகர்கள் எனக்கு பல பட்டப்பெயர்களை அவர்களே சூட்டி, என்னை அவற்றை என் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும்படி பலமுறை கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் இப்பட்டபெயர்களெல்லாம் எனக்கு பிடிக்காது. என்னை என் ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்." என கூறினார்.

தினமும் ஒரு பட்டபெயரை யோசித்து போட்டுக்கொள்ளும் இன்றைய இளம் நட்சத்திரங்களுக்கு மத்தியில் சூர்யா ஒரு ரியல் ஹீரோ தான்!!! ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் சொன்னது நினைவிக்கு வருகிறது. "பட்டமும் பதவியும் நாம தேடிபோக கூடாது. அதுவா நம்மை தேடிவரனும்...."

குறிப்பு :
தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற சிவகுமாரின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது கண்ணியமான பேச்சு ஆகும். அதே கண்ணியத்தை அவரது மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் கடைபிடிக்கிறார்கள். "தாயை போல பிள்ளை. நூலைபோல சேலை" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

1 comments:

karuppaiah said...

really very nice kannan
Suriya oru real hero thaan