பின்னுறாரு விஜய டி.ஆரு!
கடந்த 16-ம் தேதி... ல.தி.மு.க. (அதாங்க லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்...என்ன லட்சியம்னு ஆராய்ச்சியெல்லாம் நடத்தக் கூடாது!) தலைவரான விஜய டி.ராஜேந்தர் பிரஸ் மீட் வச்சிருந்தார். பத்திரிகைகள்தான் அவரை வச்சு காமெடி பண்றாங்கன்னா, அவரே அவரைப் பத்தி காமெடி பண்ணிக்கிறதை எங்கே போய் சொல்றதுன்னே தெரியலை!
''நாங்க கூட்டணி சம்பந்தமா முதல்ல சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான சரத்குமார்கிட்ட பேசினோம். அப்புறம் நாடாளும் மக்கள் ('நாம') கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக்கோட பேசினோம். புதிய தமிழகம் கட்சித் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி யோடவும் பேசினோம். ஆனாலும், யாரும் எங்க கூட்டணிக்கு ஒத்துவரலை.
பி.ஜே.பி. , ம.ம.க-னு அவங்க மூலைக்கு ஒருத்தரா பிரிஞ்சு போயிட்டாங்க. கூட்டணிக்கு ஆள் கிடைக்கலைங்கிறதுக்காக நாங்க சும்மா இருக்க முடியுமா என்ன..? இந்தத் தேர்தல்ல அஞ்சு தொகுதியில ஆள் நிறுத்திட்டேன்ல. நானும்கூட போட்டியிடறேன். ஆள் கிடைச்சா எட்டு தொகுதிகள்ல போட்டியிடுற ஐடியாவும் இருக்கு... எப்படி நம்ம செயல்பாடு?!''
பி.ஜே.பி. , ம.ம.க-னு அவங்க மூலைக்கு ஒருத்தரா பிரிஞ்சு போயிட்டாங்க. கூட்டணிக்கு ஆள் கிடைக்கலைங்கிறதுக்காக நாங்க சும்மா இருக்க முடியுமா என்ன..? இந்தத் தேர்தல்ல அஞ்சு தொகுதியில ஆள் நிறுத்திட்டேன்ல. நானும்கூட போட்டியிடறேன். ஆள் கிடைச்சா எட்டு தொகுதிகள்ல போட்டியிடுற ஐடியாவும் இருக்கு... எப்படி நம்ம செயல்பாடு?!''
- இதாங்க டி.ஆரோட ஒளிவு மறைவில்லாத பேச்சு! என்னதான் காமெடி பண்ணினாலும் இப்படி தடாலடியா பேசவும் ஒரு தில்லு வேணும்தானே!
'ஆரம்பமே அபசகுனமா இருக்கே..!'
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு காலையில் முதல் ஆளாக வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார் ஷாஜகான். அவர் கையெழுத்துப் போடப்போன நேரம் பார்த்து மின்சாரம் தடைப்பட,
''ஆரம்பமே அபசகுனமாஇருக்கே... ஒருவேளை தோத்துப் போயிடுவோமோ...''
என்று உடன் வந்தவர்களிடன் கவலையோடு கேட்டார்.''அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நீங்கதான் எம்.பி. தைரியமா கையெழுத்துப் போடுங்க!''
என்று அவர்கள் உற்சாகமூட்ட, கையெழுத்துப் போட்டார் ஷாஜகான்.வெளியே வந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
''போன நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டி போட்டு எட்டாயிரத்து சொச்சம் ஓட்டு வாங்கினேன். காதலர்களின் நலனுக்காக அப்போ நான் நல்ல பல திட்டங்களை அறிவிச்சதால, காதலிக்கிறவங்க எல்லோருமே எனக்கு ஓட்டுப் போட்டாங்க. இந்த முறையும் பிரசாரத்தில் கட்டாயம் நான் காதலர்களுக்குக் குரல் கொடுப்பேன். அதேபோல 'வேலைக்குப் போறவங்க எல்லோருமே ஒருநாள் வேலையை விட்டுட்டுத்தான் ஓட்டுப் போட வர்றாங்க. அதனால அந்த இழப்பை சரிக்கட்ட ஓட்டுப் போடும் மக்களுக்கு அலவன்ஸ் குடுக்கணும். இப்படி பணம் கொடுப்பதால், மக்கள் ஆர்வத்தோடு ஓட்டுப் போட வருவாங்க. இந்தக் கோரிக்கையை நான் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியிருக்கேன். அவங்க நடவடிக்கை எடுக்கலைன்னாலும், நான் ஜெயிச்சு நாடாளுமன்றம் போனதும் கண்டிப்பா குரல் கொடுப்பேன்!''
என்று அசத்தினார்.சரத் குமார் கட்சி வேட்பாளர் எஸ்கேப்!
சரத்குமாரின் ச.ம.க சார்பில் ஸ்ரீ பெரும்பதூர் தொகுதியில் 'ராவணன்' (!) ராமசாமி என்பவர் போட்டியிடுவர் என்று அறிவிக்கப் பட்டது. கடைசி நாள் கூட மனு தாக்கல் செய்ய வரதாவரிடம் ஏன் என்று கேட்ட பொது,
நான் கட்சியிலேயே இல்லை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட விலகிவிட்டேன்
என்று 'குண்டை' தூக்கி போட்டார்!டெல்லிக்கு டவுன் பஸ்!
தஞ்சாவூர் தொகுதியில சுயேச் சையா போட்டியிடுற சோழ மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரான கனக ராஜா, வேட்பு மனுத்தாக்கல் பண்ணிய உடனே, பிரசாரத்தை ஆரம்பிச்சிட்டார். கலெக்டர் ஆபீஸ் வாசல்ல நின்ன பொதுமக்கள்கிட்ட,
''நான் ஜனாதிபதி தேர்தலுக்கே போட்டியிட்டவன். அஞ்சு தடவை பார்லிமென்ட் தேர்தலிலும், ஆறு தடவை சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டிருக்கேன். அதனால மக்களோட எல்லா பிரச்னைகளும் எனக்கு அத்துப்படி. நான் எம்.பி. ஆனேன்னா தஞ்சாவூர்லேர்ந்து டெல்லிக்கு டவுன் பஸ் விடுவேன். விளையாட்டுக்குச் சொல்லலை... உங்கள்ல எத்தனை பேரு டெல்லியை நேர்ல பார்த்திருக்கீங்க? இந்த மாதிரி யெல்லாம் யாராச்சும் உங்ககிட்ட அக்கறையா என்னிக்காவது விசாரிச்சிருக்காங்களா?''
என சீரியஸாகப் பேசிக்கொண்டே போனார். கேட்டவர் களுக்குத்தான் கிர்ர்ர்ரு!நன்றி : ஜு.வி
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








2 comments:
kalakkal collection
This comedy is really a tragedy for all indian citizens. As a remedy for this, I hope you will publish about Sarath Bapu, Chennai South Candidate.
Post a Comment