சந்தோஷமானாலும் சரி துக்கமானாலும் சரி காதலின் உணர்வு காற்றில் இலவம் பஞ்சு பறப்பதுபோல, மென்மையான…. தள்ளாட்டமான ஒரு மயக்கம்தானே!
காதல் எப்போதுமே
புரியாதவைகளின் புதையல் தான்.
கேள்விகளே
விடைகளாவது இங்கு மட்டும் தான்.
தெரியவில்லை என்ற
பதில் தான்
அதிகமாய் இங்கே பரிமாறப்படும்.
நடக்குமா என்னும்
வினாக்களுக்கும்,
முடியுமா எனும்
முகப்பாவனைகளுமே
காதலின் வழியெங்கும்.
ஒவ்வோர் மனசுக்கும்
தன் காதல் மட்டுமே
தெய்வீகம்,
மற்றவை எல்லாம்
மோகத்தின் வேஷங்கள்.
பார்க்குமிடமெல்லாம்
பிரமிடுகள் எழுந்தாலும்,
எங்கேனும் முளைக்கும்
ஓர் முளையை நம்பியே
நடக்கும்
இந்த பரிசுத்த ஆடுகள்.
கவிதைகளின் முதல் தளம்
பெரும்பாலும்
காதலின் அடித்தளம் தான்.
பிரபஞ்சம் சுருங்கினாலும்
தன் காதல் மட்டும்
தீர்க்கக் கோடாய் மாறியேனும்
தப்பிக்குமெனும்
தீர்க்கமான நம்பிக்கை,
காதல் கரைகளில் கிளிஞ்சல்களாகும்.
இது,
உதடுகள் திறந்து வைத்து
உணர்வுகளில்
பூட்டிட்டுக் கொள்ளும்
உற்சாக ஊற்று.
புலன்களுக்குச்
சொடுக்கெடுக்கும் பூக்கூட்டம்,
காதல்,
மௌனங்கள்
தினம் நடத்தும் பொதுக்கூட்டம்.
காதலியுங்கள்,
காதல்
நாட்டிய மலர்களின் நந்தவனம்.
தாண்டி வந்த திருப்தி
தோல்வியிலும் தொடரும்.
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








4 comments:
காதல் செய்துவிட்டு,
அப்புறம் அனுபவிச்சு கவிதை எழுது,
Note:
கவிதையை பார்த்தா
அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கு...
டேய் உண்மைய சொல்லு,
யாருடா அது
Dhans
Its all by nature machie.....!!!
Feel it!
Enjoy it!
அங்க வந்த பின்னூட்டத்தைக் கூட காப்பி செஞ்சா போட்டுக்கணும்!
//ஹேமா சொன்னது,
செப்டம்பர் 24, 2008 இல் 4:11 மு.பகல்
சந்தோஷமானாலும் சரி துக்கமானாலும் சரி காதலின் உணர்வு காற்றில் இலவம் பஞ்சு பறப்பதுபோல,மென்மையான…. தள்ளாட்டமான ஒரு மயக்கம்தானே!//
சேவியர் அவர்களின் அருமையான கவிதை யினை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி கண்னன்!
சேவியர் அவர்களுக்கு பாராட்டுக்கள்!
Post a Comment