எத்தனைநாள்
பேனாவுடன் கண்விழித்தும்
வாராத கவிதை
உண் கடைக்கண்பார்வையில்
காட்டாறாய் உடைந்தது இன்று...
முள்ளை முள்ளால்
ஏடுப்பதுபோல்
என் இதயத்து வலிகளைக் களையும்
மருந்தாய் வந்தாயோ?
பட்ட மரம் துளிர்விடுமா?
பாலை சோலையாகுமா?
ஆகிறதே
நீ்
மனது வைத்தால்....
பள்ளிக்குழந்தை
வீடு செல்லத்துடிப்பதுபோல
எப்போது மணி ஐந்தாகும்
என காத்திருக்கிறேன்
ஓடி வந்து உனை பார்க்க!!!
நன்றி : சிவா
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








0 comments:
Post a Comment