Feb 9, 2009

நான் கடவுள் - திரைப்படம் ஒரு பார்வை

நாகர்கோவிலுக்கு நண்பர் கார்த்தியின் திருமண விழாவுக்கு போனபோது அங்கே இந்த படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது நண்பர்களுடன்.

இனி படத்தைப்பற்றி என் பார்வையில் ....

யாரும் தொட அஞ்சும், தொட்டிராத கதைக்களத்தைத் தொட்டதுடன் அதில் நம்மையும் ஆழ்த்திவிடும் பாலா வழக்கம்போல ஜெயித்திருக்கிறார்.

முந்தைய பாலாவின் படங்களும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டவையே என்றாலும், பார்க்கும் ரசிகர்களுக்கிடையே ஏதோ ஒரு பிரிவுக்காக மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில், இப்படத்தின் கதை களம் அப்படி...

கதை : ஆன்மிக பற்று மற்றும் ஜோதிடம் காரணமாக ஆசையாகப் பெற்றெடுத்த மகனை வீட்டை விட்டே துரத்துகிறார் தந்தை. காசியில் அடைக்கலமாகிறான். சாதுக்கள் மற்றும் சந்நியாசிகளுக்கிடையே வளர்ந்து பெரியவனாகிறான்(ஆர்யா). நீண்ட தலைமுடியும், அகோர பசி கொண்ட கண்களுடன் அழகான அகோரி வாலிபனாக அவன் காட்சித் தருகிறான்.

இதற்கிடையே தான் செய்த தவறை உணர்த்த தந்தை ஆர்யாவைத் தேடி வாரணாசிக்கு வருகிறார் மகளுடன். ஆர்யாவை ஒருவழியாக கண்டு (பாலா சார் எப்படி?) அந்தக் கோலத்தில் பார்ப்பவர் அதிர்ந்து போகிறார். இருந்தாலும், தன்னுடன் ஆர்யாவை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வருகிறார். இங்கு வந்த பின், ஆர்யாவின் வாழ்க்கையில் நேரும் திருப்பங்களும் அவர் மீண்டும் காசிக்கே திரும்புகிராரா இல்லையா என்பது தான் கதை.

தெருவோரம், கோவில் படிகளில், பஸ், ரயிலில் வாடி யாசகம் கேட்கும் உடல் குறைபாடுடைய பல சராசரி மனிதனின் வாழ்கையில் நடக்கும் வாழ்கையை படம் பிடித்த உங்களுக்கு என் முதல் வாழ்த்துகள். இவர்களை பார்க்கும் போதெல்லாம் நான் கடவுளை திட்டுவேன். இந்த படத்திலும் ஒரு காட்சியில் கெட்ட வார்த்தைசொல்லி திடுவது போல அமைத்த உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். இதுபோல படம் எடுக்கும் 'தில் 'உங்களை போல சிலரிடம் மட்டுமே உள்ளது.

அடுத்தடுத்து பாடல்கள் என முதல் பாதிபடம் எதோ போவதுபோல இருக்கு. சற்று நேரத்திலேயே இடைவேளை வந்துவிடுகிறது, கதை ஆரம்பிக்கும் முன்னரே. மீதிபாதியில் படம் விறுவிறுப்பை தருகிறது + மிரட்டும் வகையில் வில்லனில் அசாத்திய நடிப்பு நம்மை நிலைகுலைய வைக்கிறது.

படத்தில், ஆர்யாவின் நடிப்பை காட்டிலும் பூஜாவின் நடிப்பு அற்புதம். இருவருக்கும் விருதுகள் கிடக்க தகுதியுடையவர்ளே!. உடல் குறைபாடுயவர்களின் மனக்குறையை பலஇடங்களில் தெளிவாக காட்டியிருப்பது அற்புதம். மேலும், போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்கும் காட்சி, கோர்டில் நீதிபதி விசாரிப்பதும் அதற்கு ஆர்யாவின் மிரட்டும் நடிப்பும் ஆஹா!!!

படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படியாக உள்ளவர்களில்
  • இளையராஜாவின் பழைய பாணியில் பின்னணி இசை + பாடல்கள்
  • நக்கலாய் பேசும் அந்த சின்ன பயன். அவனது பேச்சு அனைவராலும் ரசிக்கும்படி உள்ளது.
  • சண்டை காட்சிகள் - கொடுக்கும் பணத்தில் பாதி இந்த சண்டை காட்சிகளுக்கே தரலாம்!!! சபாஸ் "சூப்பர்".
  • குறைந்த வசனத்தில் (சபாஸ் "ஜெயமோகன்") காட்சி அமைப்புகள்.
  • கேமெரா படத்துக்கு ஒரு கூடுதல் அம்சம்.
படத்தில், பலஇடங்களில் சமஸ்கிருதம் பேசுவதால் நடுத்தர ரசிகன் (என்னை போல?!) புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னே எப்படி கீழ்தர ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள்? ஹிந்தியில் பேசு சில இடங்களில் தமிழ் உரையாடல்கள் எழுத்துவடிவில் இடம்பெறுவது போல் சமஸ்கிருதம் பேசும் இடங்களும் செய்திருகலாமே ? என் நேரம் இல்லையா? இல்லை அனைத்துரசிகனும் சமஸ்கிருதம் தெரிந்திருக்கும் என்ற உயர்ந்த சிந்தனையா?

இரக்கமே இல்லாத மனிதகள் மத்தியில் (வில்லன்கிட்டே) சிக்கிக்கொள்ளும் பூஜாவின் கற்ப்புக்கு களங்கமில்லாமல் கடைசிவரி காப்பாற்றிய விதம் சற்றே நெருடல் தான்.பாலா சார், ஏன் உங்கள் படத்தில் வரும் ஹீரோக்கள் அனைவரும் முரட்டு சுபாவகளுடன், திமிருடன், வீட்டுக்கு அடக்கதவர்கள் போல சித்தரித்து காட்டுவது என்று தான் நிர்குமோ ? (உங்களுக்கே வெளிச்சம்).

சேது வில் - விக்ரம் முரட்டு இளைனன்
நந்தாவில் - சூர்யா முரட்டுஇளைனன்
பிதாமகனில் - விக்ரம் முரட்டு இளைனன், சூர்யா வீட்டுக்கு அடங்காதவன்
நான் கடவுளில் - ஆரியா முரட்டுஇளைனன்


அதே போல இவரது படத்தில் வரும் கதாநாயகிகள் சில படங்களில் கதாநாயகனும் இறந்து விடுவதும் ஏனோ ? (ஏன் சார் காதல் தோல்வியா உங்களுக்கு ?)

சேது வில் - அபிதா இறந்து விடுவார்
நந்தாவில் - சூர்யா இறந்து விடுவார்
பிதாமகனில் - சூர்யா இறந்து விடுவார்
நான் கடவுளில் - பூஜா இறந்து விடுவார்


மொத்தத்தில் ஒரு 'டாகுமெண்டரி' படம் பார்த்த திருப்தி மனதில். பாலா சார் எங்களை ஏமாற்றிவிடீர்கள்!!!

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

5 comments:

vijay said...

Another decent work done by Bala and his team.He conveyed his thoughts in his own style. Naan Kadavul is a very good documentary film. In my point of view, it is not bad and as well as not good. Pooja's performance is the highlight of the film. Hope she will get an award for her wonderful performance. Arya's performance is not to the expected level.

Kannan: You praised Bala in the beginning of your review and slashed him at the end.

Kannan said...

Its fact Vijay. Nothing I hide.

Wind Sailor said...

Still I didn't c this movie, but I heard that the movie is not bad as well as good.So I could not tell much about the film. Bala really has his own style or pattern for making the films. He really brings out the talent of each actors. We never thought vikram will do such a wonderful charater in pithamagan. Sethu was very good break for vikram and nanda for surya.....
Even now I want to c this movie for his screenplay not for the story.

Kannan the way u narrated is good.

(¯`·._.·NIVAS·._.·´¯) said...

good, bad, fine, average all these we can comment on this movie.

Senthil said...

i didn't see this movie, based on the response most of the people telling film was good, anyway i hope bala and raja team done good job in this movie also.

Naan kadavul is another avatharam for tamil film industry