எனக்கும் கவிதை எழுத வருகிறதே..!---------------------------------------------------------------
காதலித்து பார் -
கவிதை வரும் - என்றான்
நண்பன்!
ஆனால் -
காதலும்
காதலியும் - இல்லாமல்
எனக்கு - கவிதை
எழுத வருகிறது - இந்த
பிஞ்சு குழந்தைகளை
பார்க்கும்போதெல்லாம் ...!
ஏக்கமும் உதவியும்-----------------------------------
இறந்த பிறகும்
சைட் அடித்துகொண்டிருந்தேன் - என் கண்
தானம் பெற்றவர் மூலமாக... !!
நல்ல விஷயம் எப்படி போய் சேர்ந்தா என்ன?
"கண் தானம் செய்வீர்!!!"
வாழ்க்கை நியதி----------------------------
இறைவன்
யாரையும்
அவர்களுடைய சக்திக்கு
மீறி சோதிப்பதில்லை -
உனக்கு
வரும் சோதனை - எல்லாம்
உன் சக்திக்கு
உட்பட்டதே -
தைரியமாக எதிர்கொள்!!!
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








0 comments:
Post a Comment